Blogs

Monday, 09 December 2019 12:56 PM , by: Anitha Jegadeesan

தோட்டக்கலை சார்பில் சேலம் மாவட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானிய விலையில் காய்கறி விதைகள் வழங்கப்படுகிறது.

தோட்டக்கலை உதவி இயக்குநர் விடுத்துள்ள அறிக்கையில், நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி வட்டாரத்து விவசாயிகளுக்கு மானிய விலையில் குழித்தட்டு நாற்றுகளும், காய்கறி விதைகளும் வழங்கப்படுகிறது. வெண்டை, பாகல், பீர்க்கன், சுரை, கொத்தமல்லி, சிறிய வெங்காயம் போன்ற காய்கறி விதைகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாது தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற காய்கறிகளின் குழித் தட்டுகள் விற்கப் படுகிறது.

பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை, சிட்டா நகல், அடங்கல், ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் தோட்டக்கலை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம், என தெரிவித்தார்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)