Blogs

Saturday, 23 November 2019 02:59 PM

தமிழக அரசு மாநிலம் முழுவதும் புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தின் மூலம் ஊராட்சி, பகுதிகளில், வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் இலவச நாட்டுக்கோழி குஞ்சுகளை வழங்கி வருகிறது.

கடந்தாண்டுகளில் கிராம ஊராட்சிகளில் வசிப்பவர்களுக்கு மட்டும் செயல் படுத்திய இத்திட்டம் நடப்பாண்டில் பேரூராட்சி வரை விரிவு படுத்தப்பட்டுள்ளது. சென்ற ஆண்டுகளில் பயனாளிகளுக்கு 50 கோழி குஞ்சுகளும், அவற்றை பராமரித்து தங்குமிடம் அமைக்க ரூ. 2,500ம் வழங்கப்பட்டு வந்தது.

இத்திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் 8,700 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தற்போதைய தகவலின் படி கோழி குஞ்சுகளின் எண்ணிக்கையை 25 ஆக குறைத்தும், ஷெட் அமைக்க நிதி கிடையாது என்பது போன்றும் கூறப்படுகிறது. இதனால் கால்நடை பராமரிப்புத்துறையினர்  உண்மையான பயனாளிகளின் கண்டறிவதில் தீவரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)