Blogs

Wednesday, 04 December 2019 11:11 AM , by: Anitha Jegadeesan

ஒருங்கிணைந்த பண்ணை திட்ட பயிற்சியின் கீழ் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டார விவசாயிகளுக்கு 50% மானியத்தில் 300 பழச்செடிகள் வழங்கப்படுவதாக வேளாண் இயக்கம் தெரிவித்தது.

சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன் பெறும் வகையிலும், ஆண்டு முழுவதும் தொடர்ந்து வருமானம் வருவதற்கு உதவும் வகையில் அரசு ஒருங்கிணைந்த கூட்டுப் பண்ணைய முறையை ஊக்குவித்து வருகிறது. மேலும் இத்திட்டத்தின் மூலம் வங்கிகளில் கடன் வசதி பெறுதல், புதிய தொழில்நுட்ப முறைகளை பயிற்று வித்தல், சந்தை படுத்துதல் தொடர்பான பயிற்சிகளை அளித்து வருகிறது.

ஆலோசனை கூட்டத்தில் பேசிய வேளாண் உதவி இயக்குநர்,  வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், சாகுபடிக்கு பிந்தைய நேர்த்தி மற்றும் மானியத்தில் வழங்கப்பட்டுள்ள உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டங்கள் போன்றவற்றை பற்றி எடுத்து கூறினார். அத்துடன் தோட்டக்கலைத்துறை மூலம் பழச்செடிகள் சாகுபடி செய்வதற்கான தொழில் நுட்பங்கள் மற்றும் 50 % மானியத்தில், 300 பழச்செடிகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

விவசாயிகள் தற்போது பெய்து வரும் பருவ மழையை பயன்படுத்தி ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தில், 50 சதவீதம் மானியத்தில் மா, நெல்லி, சப்போட்டா ஆகிய ஒட்டு பழச்செடிகளை வாங்கி பயன் பெறுமாறு அறிவுறுத்தினார்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)