பாண்டிசேரி வேளாண் அறிவியல் நிலையம் சார்பாக கிராமப்புற பெண்களுக்கு கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப் பட உள்ளது. ஜனவரி 27 ஆம் தேதி முதல் 31 தேதி வரை நடை பெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இம் மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப் படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
வேளாண் அறிவியல் நிலைய திட்ட உதவியாளர் கூறுகையில், ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், மைய உதவியுடன் கிராமப்புற, பின்தங்கிய பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் இப்பயிற்சி நடை பெற உள்ளது. பயிற்சியில் தனி நபராகவோ, குழுவாகவோ கலந்து கொள்ளலாம். வேளாண் அறிவியல் நிலைத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பின்தங்கிய பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப் படும்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
பயிற்சில் பங்குபெறும் பயனாளிகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் (Mutual Agreement) அடிப்படையில் கோழி வளர்ப்பு பயிற்சி, கோழி கொட்டகை, தண்ணீர் வசதி, மின்சார வசதி மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப் படும். பயனாளிகள் கோழிகளை வளர்த்து அவற்றை விற்பனை செய்யும் போது அதில் 20% தொகையை வேளாண் அறிவியல் மையத்திற்கு வழங்க வேண்டும்.
திட்டத்தில் இணைந்து பயன் பெற விருப்புபவர்கள் இம்மாத இறுதிக்குள் தங்களின் ஆதார் அட்டை நகலுடன் வேலை நாட்களில், வேளாண் அறிவியல் மையத்தை அணுகி முன்பதிவு மற்றும் தகவல்களை பெறலாம்.
பெருந்தலைவர் காமராஜ் வேளாண் அறிவியல் நிலையம்
குரும்பபேட்,
பாண்டிச்சேரி – 605 009
தொலைபேசி : 0413- 2271352, 2271292