மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 February, 2021 11:17 AM IST
Credit : Samayam Tamil

சென்னையை சேர்ந்த இளம் ஜோடி, சற்று வித்தியாசமாக தண்ணீருக்கு திருமணம் செய்து,புதுமை படைத்தனர்.

திருமண வைபவம் (Wedding ceremony)

திருமணம் என்பது அனைவருக்குமே கனவாக இருக்கும். நம் திருமண வைபவத்தைப் பார்த்து மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும். ஆனால் இந்த தம்பதி, தங்கள் திருமணத்தின் மூலம் மற்றவர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யம் அளித்து புதிய முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

சென்னையை சேர்ந்த இளம் ஜோடி, கடந்த திங்கள்கிழமை அன்று தண்ணீருக்கு அடியில் திருமணம் செய்து கொண்டனர்.


மணமகன் கடந்த 16 ஆண்டுகளாக ஸ்கூபா டைவிங் செய்து வருகிறார். அதனால் தங்கள் திருமணத்தை நீருக்கு அடியில் செய்ய முடிவைடுத்ததுடன், திருமணத்திற்கு முன்பே மணமகளிடம் தனது விருப்பத்தை தெரிவித்து, அவருக்கும் முறையான பயிற்சிகள் அளித்துள்ளார்.

வித்தியாசமான திருமணம் (Strange marriage)

மணமகன் வி.சின்னத்துரையும், மணமகள் எஸ்.ஸ்வேதாவும் சுமார் 60 அடி நீருக்கு அடியில் திருமணம் செய்துகொண்டனர். மணமகள் சிவப்பு புடவையும், மணமகள் வேட்டி சட்டையும் அணிந்து இருந்தனர். திருமணத்திற்கு முன்பு அவர்கள் ஈரமான ஆடைகளில் மட்டுமே டைவிங் (Diving) செய்திருந்தனர். இது ஒரு பாரம்பரிய திருமண விழாவாக நீருக்கடியில் அமைந்தது. நாங்கள் காலையில் நல்ல நேரத்தில் நீராடி மாலைகளை எங்களுக்குள் மாற்றிக்கொண்டோம். பின்னர்  நான் தாலிகட்டினேன் என்று கூறுகிறார் மென்பொருள் பொறியாளரான சின்னதுரை.

ஸ்கூபா டைவிங் (Scuba diving)

ஒரு நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்ற பிறகு , சில ஸ்கூபா டைவிங்களை செய்த பின்பும் போதுமான அளவு நம்பிக்கையுடன் நான் இன்று திருமணத்தில் டைவிங்கை செய்தேன். முதல் முறை கடலின் அடி ஆழத்திற்குச் சென்ற போது மீன்கள் நீந்துவதை நான் எனக்கு மிகவும் அருகாமையில் கண்டேன். என் வாழ்நாளில் சிறந்த அனுபவமாக இதை நான் கருதுகிறேன் என்று மணமகள் ஸ்வேதா கூறியுள்ளார்.

இந்த விழாவை விவரிக்கும் மணமக்கள் நீருக்கடியில் திருமண சடங்குகளை முடிக்க 45 நிமிடங்கள் ஆனது என்றும், நீர் மாசுப்பாடு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவே தனித்துவமான முறையில் நீருக்கடியில் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்ததாகவும் கூறியுள்ளனர்.மணமகனின் குடும்பத்தாரே இந்த நீருக்கடியில் திருமணத்தை நடத்த பரிந்துரை செய்துள்ளனர்.

மேலும் படிக்க...

5 லட்சம் காய்கறி நாற்றுகள் விற்பனை இலக்கு - தோட்டக்கலைத்துறை ஏற்பாடு!

தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம்!

மீன் சாப்பிட ஆசையா? நோய்களுக்கு இரையாகப்போறீங்க உஷார்!

English Summary: Underwater marriage - Chennai couple doing innovation!
Published on: 04 February 2021, 11:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now