நம்முடைய அன்றாட வாழ்வில் பருப்பின் பயன்பாடும், தேவையும் அதிகம் இருப்பதால் மத்திய அரசு நாடு முழுவதும் பருப்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது. முன்னதாக மத்திய அரசு அந்தந்த மாநில வேளாண்மை துறைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. தமிழக வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு மானிய உதவிகளை முறையாக வழங்கியதின் பயனாக பருப்பு சாகுபடி பரப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தை பொருத்த வரை விவசாயிகள் 3 பருவங்களில் பயறு வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது பெரும்பாலான நெல் விவசாயிகள் சாகுபடிக்கு பின் உடனே பயறு விதைத்தல் வேலைகளை தொடங்கலாம். முன்பெல்லாம் ஹெக்டேருக்கு 600 கிலோவிற்கு குறைவான விளைச்சல் இருந்தது. ஆனால் தற்போதைய நிலை மாறி, புதிதாக வந்துள்ள ஆராய்ச்சி ரகங்களால் 1000 கிலோ வரை மகசூல் எடுக்க முடியும் எடுக்க முடிகிறது.
நடப்பாண்டில் பருப்பு சாகுபடி பரப்பு, 11.6 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. எனினும் தற்சமயம், வடமாநிலங்களில், பருப்பு சாகுபடி குறைந்துள்ளதால் கிலோ ரூ.100 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் சாகுபடி செய்துள்ள பருப்பு விவசாயிகளுக்கு, அதிக வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.