Blogs

Saturday, 02 November 2019 11:00 AM

தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 12 கடலோர மாவட்டங்களில் இராமநாதபுரம் மாவட்டமும் ஒன்று.  சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல்வேறு  நலத்திட்டங்கள் பன்னாட்டு வங்கி நிதியம் மூலம் இம்மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு முதல் இத்திட்டத்தின் மூலம் எல்லா தரப்பு மக்களும் குறிப்பாக விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், மீனவர்கள் போன்றோருக்கு இதுவரை ரூ.14.65 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நடப்பு ஆண்டில் (2019-20) சுமார் 350 ஏக்கரில் சிறுதானிய விதைகளை பயிரிட திட்டமிட்டிருப்பதாக வேளாண்துறை தெரிவித்துள்ளது.  இதற்காக 12 ஊராட்சிகளுக்கு உள்பட்ட கிராமங்களில் இருந்து 1200 விவசாயிகளை தேர்வு செய்து, அவர்களுக்கு தலா இரண்டரை கிலோ குதிரைவாலி விதைகளை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

கூடுதலாக 43 ஏக்கரில் குதிரைவாலி பயிரிட திட்டமிட்டுள்ளதால், சிறுதானிய விவசாயம் மேற்கொள்ள இருக்கும் 17 பேருக்கு மானிய விலையில் விதைகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புதுதில்லியிலிருந்து வரும் சிறப்புக்குழுவினா் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்ட பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்யவுள்ளனா்.  நவம்பா் 1, 2 ஆகிய தேதிகளில் 12 ஊராட்சிகளில் ஆய்வை மேற்கொள்ளவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)