டிவிஎஸ் நிறுவனம் ஹைட்ரஜன் செல்களால் இயங்கும் வாகனத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. நாட்டில், பெட்ரோல் வாகனங்களுக்கு இணையாக எலக்ட்ரிக் வாகன உற்பத்தி வளர்ந்து வரும் நிலையில், இந்தியாவில், இதுவரை, யாரும் முன்னெடுக்காத முயற்சியை டிவிஎஸ் நிறுவனம் கையில் எடுத்துள்ளது. அதாவது, முதலாக ஹைட்ரஜன் ஃபியூயல் செல்களால் இயங்கும் ஸ்கூட்டரை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான பேட்டன்ட் உரிமையையும் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹைட்ரஜன் ஸ்கூட்டர் (Hydrogen Scooter)
டிவிஎஸ் வாகனங்களில் அதிகமாக வரவேற்பை பெற்ற ஐ-கியூப் ஸ்கூட்டர் தற்போது எலக்ட்ரிக் வெர்ஷனில் விற்பனைக்கு கிடைத்து வருகிறது. இந்நிலையில், தற்போது ஐ-கியூப் ஸ்கூட்டரை, ஹைட்ரஜன் ஃப்யூயல் செல் வெர்ஷனிலும் விற்பனைக்கு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த ஸ்கூட்டர் என்ன மாதிரியான முக்கிய கூறுகளுடன் உருவாக்கப்பட உள்ளது என்பதை விளக்கும் வகையில் வரை படத்தையும் வெளியிட்டிருக்கின்றது டிவிஎஸ் நிறுவனம். அதாவது, ஹைட்ரஜன் ஃப்யூயல் செல் வாயுவை நிரப்புவதற்கான சிலிண்டர் எந்த இடத்தில் இடம் பெற இருக்கின்றது, வாயுவை மின்சாரமாக கன்வெர்ட் செய்யும் கருவி மற்றும் பேட்டரி போன்ற பிற முக்கிய அம்சங்கள் எந்த இடத்தில் நிலை நிறுத்தப்பட உள்ளன என்பதை விளக்கும் வகையிலேயே இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஹைட்ரஜன் ஃப்யூயல் செல் (Hydrogen Fuel Cell)
ஹைட்ரஜன் ஃப்யூயல் செல் எலெக்ட்ரிக் வாகனங்கள், வழக்கமான மின்சார வாகனத்தை விட பல மடங்கு அதிக சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஏனெனில் இந்த வாகனத்தில் உள்ள சார்ஜ் செய்யும் வேலையை ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்களே பார்த்துக் கொள்ளும். அதாவது, ஹைட்ரஜன் ஃப்யூயல் செல்லை வேதி வினை மாற்றம் செய்வதன் வாயிலாக அதனை மின்சாரமாக மாற்றிக் கொள்ள முடியும். இந்த செயலின்போது வெறும் சூடான நீராவி மட்டுமே வெளியேறுவதால், சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஹைட்ரஜன் ஃப்யூவல் வாகனங்கள் ஏற்படுத்தாம்.
அதேபோல், ஒரு முறை ஹைட்ரஜன் ஃப்யூயல் செல்லை நிரப்புவதனால் பல 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியுமாம். இதனை நிறப்புவதற்கு, வழக்கமான சிஎன்ஜி ஆட்டோக்களில் வாயுவை நிரப்புவதைப் போலவே மிகவும் குறைவான நேரமே தேவைப்படும் என கூறப்படுகிறது. இதனால்தான், இப்போதே இவ்வாகனம் பலரின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியியுள்ளது. ஆனால் இதன் விலை நிலவரம் குறித்த எந்த ஒரு தகவல்களும் கிடைக்கவில்லை.
மேலும் படிக்க
ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக சந்தைக்கு வரும் ஹோண்டா சிபி350 பிரிகேட்!