Blogs

Monday, 25 November 2019 01:59 PM , by: Anitha Jegadeesan

கஜா வாழ்வாதாரத் திட்டதின் கீழ், நடப்பாண்டிற்கான காய்கறி சாகுபடிக்கு இலக்கு நிர்ணயத்துள்ளது. அதன் படி  திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் காய்கறிகளின் விதைகளான சின்ன வெங்காயம்,  புடலை, பீர்க்கன்காய், வெண்டைக்காய், சுரைக்காய், பாகற்காய் உள்ளிட்ட விதைகள் 100% மானியத்தில் வழங்க பட உள்ளது. இதன் மூலம் தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடி பரப்பை உயர்த்த முடியும் என்று கூறியுள்ளது.

தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் வெள்ளக்கோவில் வட்டாரத்தில் மட்டும் 56 ஹெக்டேர் பரப்பளவு இலக்கு நிர்ணயித்திருப்பதால் ஆர்வமுள்ள விவசாயிகள் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம். இதற்காக விவசாயிகள் தங்களுடைய நிலத்தின் சிட்டா, அடங்கல், கிராம நிர்வாக அலுவலரின் சான்று, புகைப்படம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநரை அணுகுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)