குறைந்த முதலீட்டில் கனிசமான லாபம் தரும் உபதொழிலாகவும், கோழி வளர்ப்புக்கு அடுத்தபடியாக இருப்பது ஆடு வளர்ப்பு ஆகும். கால்நடை வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள், விவசாயிகள் என அனைவரும் கலந்துக் கொள்ளலாம். பயிற்சியில் செம்மறியாடு, வெள்ளாடு வளர்ப்பு, தீவன மேலாண்மை, நோய் மற்றும் தடுப்பு போன்றவை குறித்து வகுப்புகள் நடைபெற உள்ளன.
திருச்சியில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், வருகின்ற 6, 7ம் தேதிகளில் (நாளை, மறுநாள்) காலை 10 மணி முதல் இலவச ஆடு வளர்ப்புப் பயிற்சிகள் நடை பெற உள்ளது. மேலும் 0431-2331715 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு அல்லது பயிற்சி நாளன்று நேரில் சென்று பங்கேற்கலாம் என பேராசிரியரும், மையத்தலைவருமான பி.என். ரிச்சர்டு ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.