பண்ணைத் தொழில் மற்றும் உபதொழில் முனைய விரும்புவோர்க்கும், நாட்டுக் கோழி வளர்பினை மேம்படுத்த நினைப்பவருக்கும் இப்பயிற்சி முகாம் பயனுள்ளதாக இருக்கும். நாட்டு கோழி வளர்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை பயிற்சி குறித்த ஒரு நாள் வகுப்பினை தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
சமீப காலமாக மக்களின் நுகர்வு மாறிவருகிறது. பிராய்லர் கோழிகளை தவிர்த்து, நாட்டுக் கோழிகளுக்கு மாறி வருகிறார்கள். இதனால் இதற்கான தேவையும், சந்தை வாய்ப்பும் அதிகரித்துள்ளது. இதற்கான முதலீடு மற்றும் பராமரிப்பு ஆகியன குறைவு என்பதால் விவசாயிகள் மட்டுமல்லாது, கிராமப்புற பெண்கள் என அனைத்து தரப்பினரும் நாட்டுக் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு கூடுதல் வருமானம் பெறலாம். நோய் தொற்றுகளை எதிர்த்து நன்கு வளரும் தன்மை கொண்டிருப்பதால் வளர்ப்பது எளிது.
பயிற்சி விபரம்
தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் வரும் ஜனவரி 21 ம் தேதி (செவ்வாய் கிழமை) காலை 10 மணி முதல் நடை பெறவுள்ளது.
பயிற்சியில் பங்கேற்கும் அனைவரும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஒன்றை கைவசம் வைத்துக் கொள்ளும்படி மையத் தலைவர் ஏ.முகமது சபியுல்லா தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு 87547 48488, 04362-264665 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.