Blogs

Monday, 06 September 2021 06:31 PM , by: R. Balakrishnan

Viral video

சிறுத்தையை எதிர்த்து நெஞ்சை நிமிர்த்திய பூனையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், ஒரு கிணற்றின் அருகே சுற்றித் திரிந்த பூனையைப் பிடிக்க சிறுத்தை முயன்றது. பூனை கிணற்றினுள் சுவரின் விளிம்பிக்குச் சென்று நின்றது. அதைத் துரத்திச் சென்ற சிறுத்தை தவறுதலாகக் கிணற்றுக்குள் விழுந்தது. பின், பூனை நின்ற சுவரின் விளிம்புக்கு வந்த சிறுத்தை பூனையைப் பிடிக்க முயன்றது. அப்போது, அந்தப் பூனை சிறுத்தையை எதிர்த்து நெஞ்சை நிமிர்த்தி நேருக்கு நேர் மோதுவது போல் நின்றது. இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாசிக் மேற்கு மண்டல துணை வனப் பாதுகாவலர் பங்கஜ் கர்க் கூறுகையில், 'பூனையைத் துரத்திய சிறுத்தை கிணற்றுக்குள் விழுந்து சிக்கிக் கொண்டது. வனத்துறையினர் சிறுத்தையை மீட்டு காட்டுக்குள் விட்டுள்ளனர்' என்றார்.

மேலும் படிக்க

பாரா ஒலிம்பிக் பாட்மின்டனில் இந்தியாவிற்கு முதல் தங்கம்!

கர்நாடகாவில் சொதப்பல்: சில நிமிடங்களில் இளைஞருக்கு 2 முறை தடுப்பூசி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)