உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உச்சநீதிமன்றப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி (Job)
Junior Court Assistant
காலியிடங்கள்
210
சம்பளம்
ரூ.35,400
தகுதி (Educational Qualification)
-
ஏதாவது ஒரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
-
கணினி குறித்த அடிப்படை அறிவை பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (Age limit)
01.07.2022 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
-
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, தட்டச்சு தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
-
விண்ணப்பிக்கும் முறை உச்சநீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்(Fee)
எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250யும், மற்ற பிரிவினர்களுக்கு ரூ.500யும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 10.7.2022
மேலும் படிக்க...
நல்லெண்ணெய் விலை கிடு கிடு ஏற்றம் - ஒரே வாரத்தில் ரூ.166 உயர்வு!