சுற்றுச் சூழல் மாசுபாடு, பெட்ரோல் - டீசல் விலையேற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் தற்போது மிகவும் பிரபலமாகி வருகின்றன. அதுவும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்றாற்போல, பல்வேறு வசதிகளுடன் புதிய மாடல்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க நினைப்பவர்கள் அதன் விலை, லுக், மைலேஜ் போன்ற பல்வேறு விஷயங்களைப் பார்த்து வாங்குவார்கள். அப்படி ஸ்கூட்டர் வாங்குவோருக்கு சில ஆப்சன்கள் இங்கு தரப்பட்டுள்ளது. இதில் எதை வேண்டுமானாலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குபவர்கள் தேர்வு செய்யலாம்.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
இந்தியாவில் தற்போது டாப் லிஸ்ட்டில் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooter) இவைதான்.
ஓலா எலெக்ட்ரிக் எஸ்1 மற்றும் எஸ்1 புரோ ஸ்கூட்டர்கள் இப்போது அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. எஸ்1 ஸ்கூட்டர் விலை ரூ.99,999 ஆகவும், எஸ்1 புரோ ஸ்கூட்டர் விலை ரூ.1,21,999 ஆகவும் உள்ளது. இந்த ஸ்கூட்டர்களில் 750W போர்டபிள் சார்ஜர் மற்றும் 2.9k Wh பேட்டரி உள்ளது. ஆறு மணி நேரத்தில் இதன் பேட்டரி முழுவதும் சார்ஜ் ஆகிவிடும்.
பஜாஜ் சீட்டாக் ஸ்கூட்டரும் தற்போது அதிகளவில் விற்பனையாகிறது. இதன் விலை ரூ.1.42 லட்சம்.
அதர் 450எக்ஸ் - விலை ரூ.1.32 லட்சம்
சிம்பிள் ஒன் - விலை ரூ.1.09 லட்சம்
டிவிஎஸ் ஐகியூப் - விலை ரூ.1.15 லட்சம்.
மேலும் படிக்க