முதலீட்டின் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் ஒரு நிலையான வருமானம் அளிக்கும் பல்வேறு திட்டங்களை வங்கிகள் வழங்கி வருகின்றன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் மாதாந்திர வருமானத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 பெறுவது எப்படி என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.
பாதுகாப்பான முதலீடு
இன்றைய சேமிப்பு தான் நாளைய எதிர்காலத்தை வளமுடன் வாழ வழிவகை செய்கிறது. பாதுகாப்பான சேமிப்பிற்கு பல்வேறு திட்டங்களில் பணம் போட்டு வைப்பார்கள். முதலீடு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அதேநேரம், சரியான திட்டத்தில்தான் முதலீடு செய்கிறோமா என்பதையும் பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையான வருமானம் தரும் பாதுகாப்பான திட்டத்தை இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி செயல்படுத்தி வருகிறது.
SBI-யின் சூப்பர் திட்டம்
இத்திட்டத்தின் கீழ் நீங்கள் 36 மாதம், 60 மாதம், 84 மாதம், 120 மாதம் என முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டுத் திட்டமானது டேர்ம் டெபாசிட் திட்டத்தைப் போன்றதுதான். இதில் முதலீட்டுக் காலத்தை நீங்கள்தான் தேர்வுசெய்ய வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் வந்துகொண்டிருக்கும். இத்திட்டத்தில் யார் வேண்டுமானாலும் பயன் பெறலாம்.
மாதம் ரூ.10,000 பெற
இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் மாதத்துக்கு ரூ.10,000 வருமானம் பெற விரும்பினால் மொத்தம் ரூ.5,07,964 முதலீடு செய்ய வேண்டும். இதற்கு 7 சதவீத வட்டி கிடைக்கிறது. அதாவது, இத்திட்டத்தில் ரூ.5 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்வதாக இருந்தால் நல்ல லாபம் பெறலாம். மாதத்துக்கு 1,000 ரூபாய் தொடங்கு சேமிக்கலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை இத்திட்டத்தில் சேமித்து வந்தால் எதிர்காலத்தில் நிலையான வருமானம் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும். கொரோனா வந்த பிறகு பெரும்பாலானோருக்கு திடீரென நிதி நெருக்கடி ஏற்பட்டது. வேலையும் சம்பளமும் இல்லாமல் போனது. இதுபோன்ற சூழலில் சேமிப்புத் திட்டங்கள் கைகொடுக்கும்.
மேலும் படிக்க...
ஓய்வூதியம் வேண்டுமா..? ரூ.55- ரூ.200 செலுத்தி மாதம் ரூ.3000 பெற்றிடுங்கள்!!