நீங்கள் சொந்த தொழில் தொடங்க திட்டமிட்டிருந்தால் இந்த அறுமையான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க வாய்ப்பு தருகிறது அமுல் நிறுவனம்.
உலகளாவிய பால் நிறுவனங்களில் முதல் 20 தரவரிசையில் உள்ள நிறுவனங்களில் ஒன்று அமுல் நிறுவனம் ஆகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த அமுல் என்ற பால் தயாரிப்பு நிறுவனத்துடன் வர்த்தகம் செய்ய ஒரு பெரிய வாய்ப்பு வழங்கியுள்ளது. .
அமுல் நிறுவனம், புதிய விற்பனைக் கிளைகளை நிறுவ உரிமையாளர்களை தேடுகிறது. நீங்கள் ஒவ்வொரு மாதமும் சிறிய முதலீடுகள் மூலம் அமுல் நிறுவன தயாரிப்புகளை வாங்கி நிறைவான லாபத்தில் விற்பனை செய்யலாம். இதில் எந்த இழப்புக்கான வாய்ப்புகளும் இல்லாத ஒரு இலாபகரமான ஒப்பந்தமாகும் என்பதில் சந்தேகமில்லை.
முதலீடு எவ்வளவு?
அமுல் நிறுவனம் எந்தவொரு ராயல்டி அல்லது இலாப பகிர்வு இல்லாமல் உரிமையாளர்களுக்கே கமிஷன் அடிப்படையில் மொத்த லாபத்தை வழங்குகிறது. மேலும், வெறும் 2 முதல் 6 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் அமுல் உடனான தொழிலைத் தொடங்கலாம். அமுல் கிளையின் இருப்பிடத்தைப் பொறுத்து, ஒவ்வொரு மாதமும் 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
தொழில் தொடங்கினால் நமக்கு கிடைக்கும் கமிஷன் எவ்வளவு?
அமுல் கடையை எடுத்து நடத்தும் பொழுது, நிறுவனம் குறைந்தபட்ச சில்லறை விலையில் கமிஷனை உங்களுக்கு வழங்குகிறது. அதாவது அமுல் தயாரிப்புகளின் எம்ஆர்பி விலையில் நீங்கள் பால் பாக்கெட் மீது 2.5 சதவீதமும், பால் பொருட்களுக்கு 10 சதவீதமும், ஐஸ்கிரீமில் 20 சதவீதமும் கமிஷன் பெறுவீர்கள்.
இது மட்டுமல்லாமல், அமுல் ஐஸ்கிரீம் ஸ்கூப்பிங் பார்லரின் உரிமையானது செய்முறை அடிப்படையிலான ஐஸ்கிரீம், ஷேக், பீஸ்ஸா, சாண்ட்விச், சூடான சாக்லேட், குளிர் பானம் ஆகியவற்றில் 50 சதவீத கமிஷனும், முன்பே பேக் செய்யப்பட்ட ரெடிமேட் ஐஸ்கிரீம்களில் 20 சதவீத கமிஷனையும், அமுல் தயாரிப்புகளுக்கு 10 சதவீத கமிஷனும் அமுல் நிறுவனம் வழங்குகிறது.
அமுல் கிளை உரிமையை எடுப்பது எப்படி?
அமுல் இரண்டு வகையான உரிமையாளர்களை தேடுகிறது. முதலாவது அமுல் அவுட்லெட், அமுல் ரயில்வே பார்லர் அல்லது அமுல் கியோஸ்க் உரிமையும், இரண்டாவது அமுல் ஐஸ்கிரீம் ஸ்கூப்பிங் பார்லர் உரிமை. அமுல் அவுட்லெட் தொடங்க உங்களுக்கு 2 லட்சம் ரூபாய் முதலீடு தேவைப்படும். ஐஸ்கிரீம் பார்லர் தொடங்க, உங்களுக்கு 5 லட்சம் ரூபாய் முதலீடு தேவைப்படும். இவைகளை தொடங்க, பாதுகாப்பாக டெப்பாசிட்காக 25-50 ஆயிரம் ரூபாய் அமுல் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும்.
எவ்வளவு இடம் தேவை?
நீங்கள், அவுட்லெட், கியோஸ்க் உரிமை எடுக்க விரும்பினால், 150 சதுர அடி இடம் இருக்க வேண்டும். ஐஸ்கிரீம் பார்லர் உரிமை எடுக்க விரும்பினால் குறைந்தது 300 சதுர அடி இடம் தேவை.
எப்படி விண்ணப்பிப்பது?
நீங்கள் கிளை உரிமையை கோரி விண்ணப்பிக்க விரும்பினால், நீங்கள் retail@amul.coop என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். மேலும், அமுல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைப்பான http://amul.com/m/amul-scooping-parlours. பார்வையிடுவதன் மூலம் கூடுதல் தகவல்களைப் பெறலாம்.
மேலும் படிக்க..
பிஸினஸ் ஐடியா 2021 : அமுல் உடன் தொழில் தொடங்கலாம் வாங்க! குறைவான முதலீட்டில் நிறைவான வருமானம்!!