நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன்படி, இந்த வங்கியின் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் நுகர்வோருக்கான கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கான குறிப்பிட்ட கட்டணத்தை மாற்றியுள்ளது. இப்புதிய கட்டணம் வருகிற நவம்பர் 15ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட்ட உள்ளது. இதன்படி, நவம்பர் 15 க்கு பின்பு நீங்கள் செய்யப்படும் ஒவ்வொரு பணப் பரிமாற்றமும் புதிய கட்டணங்கள் அடிப்படையில் வசூலிக்கப்படும்.
கிரெடிட் கார்டு
இந்தியாவில் தற்போது பெரும்பாலான சேவைக்குக் கிரெடிட் கார்டு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது, அண்மையில் மத்திய அரசு வருமான வரி செலுத்துவதற்குக் கூடக் கிரெடிட் கார்டு பயன்படுத்த அனுமதி அளித்து அதற்கான மாற்றங்களை வருமான வரித் தளத்தில் செய்தது.
இந்த நிலையில் வீட்டு வாடகைக்குக் கிரெடிட் கார்டு மூலம் பேமெண்ட் சேவை பலருக்குப் பெரிய அளவில் உதவும்.
வீட்டு வாடகை
இந்தியாவில் வீட்டு வாடகைக்குக் கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் பேமெண்ட்-க்கு ஐசிஐசிஐ வங்கி அக்டோபர் 20 முதல் கட்டணம் விதித்து வந்த நிலையில், தற்போது எஸ்பிஐ வங்கியும் கட்டணம் விதிக்கத் துவங்கியுள்ளது.
ஒவ்வொரு மாதமும் RedGiraffe, Mygate, Cred, Paytm மற்றும் Magicbricks போன்ற பல்வேறு தளத்தில் வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு வாயிலாக வீட்டு வாடகையைச் செலுத்தி வருகின்றனர். தற்போது இந்தப் பேமெண்ட் அனைத்திற்கும் அதாவது ஒவ்வொரு மாதமும் வாடகை செலுத்தும் போது 99 ரூபாய் + வரி என்பதைக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
புதிய கட்டணம்
இதேபோல், ஈஎம்ஐ பணப் பரிமாற்றத்திற்குத் தற்போது 99 ரூபாய் + வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இனி இதற்கு 199 ரூபாய் + வரி வசூலிக்கப்பட உள்ளது.
மேலும் படிக்க...