இந்திய குடிமகனுக்கு மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று ஆதார் கார்டு. இது தனிநபரின் அடையாள அட்டையாக பயன்படுத்தப்படுகிறது. வங்கிப் பணியாக இருந்தாலும் சரி, சட்டப் பணியாக இருந்தாலும் சரி, அனைத்து இடங்களிலும் ஆதார் எண் தேவைப்படுகிறது. ஆதார் கார்டு எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும், இந்த ஆவணம் எதற்கெல்லாம் உதவுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
பென்சன் (Pension)
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஆதார் அட்டை அத்தியாவசிய அடையாள அட்டையாக செயல்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் அல்லது பிற அமைப்புகளிடமிருந்து ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட ஜீவன் பிரமான் பத்திரம் (ஆயுள் சான்றிதழ்) அவசியம். இந்த ஆயுள் சான்றிதழ் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் 10, 2014 நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களுடைய ஆதார் அட்டையின் மூலம் டிஜிட்டல் முறையில் அவர்களின் தகவல்களைப் பெறுவதால், அவர்களது ஓய்வூதியத்தை நேரடியாக வீட்டிலேயே பெறுவதை உறுதி செய்கிறது.
பிஎம் கிசான் திட்டம் (PM Kisan)
மத்திய அரசின் பிஎம் கிசான் யோஜனா திட்டத்தில் நிதியுதவி பெற ஆதார் அவசியம். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் பணம் கிடைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டு விட்டன. இது தவிர, பல்வேறு வகையான அரசுத் திட்டங்களுக்கு ஆதார் அட்டை அவசியம்.
சிலிண்டர் மானியம் (Cylinder Subsidy)
பொதுமக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அரசு தரப்பிலிருந்து மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத் தொகை வெவ்வேறு அளவில் உள்ளது. இதைப் பெறுவதற்கு சிலிண்டர் இணைப்புடன் ஆதார் கார்டை இணைத்திருக்க வேண்டும். அப்போதுதான் பணம் கிடைக்கும்.
கல்வி (Education)
பள்ளி அல்லது கல்லூரியில் சேர்க்கைக்கான முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. இதுதவிர, ஆதார் அட்டை வங்கிக் கணக்கைத் திறப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும். ஆதார் அட்டையில் உள்ள முகவரி மற்றும் புகைப்படம் வங்கிகளால் செல்லுபடியாகும் முகவரிச் சான்றாகக் கருதப்படுகிறது. பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் KYC சரிபார்ப்பு மற்றும் சுயவிவர பராமரிப்புக்காக ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது.
வங்கிக் கடன் (Bank Loan)
வங்கிகளில் கடன் வாங்குவதற்கு ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாகும். பான் கார்டு மட்டுமல்லாமல் ஆதார் கார்டையும் கடன் கொடுப்பதற்கு வங்கிகள் கேட்கின்றன. வாடிக்கையாளரின் அடையாளச் சான்றாகவும், முகவரிச் சான்றாகவும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது.
மேலும் படிக்க
ஆதார் உடன் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு: வெளியாகவிருக்கும் புதிய அறிவிப்பு!