மக்களைப் பொருத்தவரை, கிழிந்த ரூபாய் நோட்டைக் கொடுத்தால் யாரும் வாங்க மாட்டார்கள். இதனை மாற்றிக்கொள்வதற்கான வசதிகளை சில வங்கிகள் ஏற்படுத்தியுள்ளன. எனவே கிழிந்த நோட்டுகள் நம் கையில் சிக்கிக்கொண்டால், நாம் அந்த வங்கிகளை நோக்கிச் செல்ல வேண்டும்.
ஆனால் அதே ரூபாய் நோட்டு, ATMல் வந்தால் என்ன செய்வது என்பது நம்மில் பலருக்கு மன உளைச்சல் இருக்கும. ஏஎனனில், இன்றைய காலத்தில் ஏடிஎம்கள் மக்களுக்கு அத்தியாவசிய வசதியாக உள்ளன. என்னதான் டிஜிட்டல் பரிவர்த்தனைகள், மின்னணு கட்டணம் போன்ற வசதிகள் வந்தாலும், ரொக்கப் பணம் பரிவர்த்தனை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. எனவே, ஏடிஎம்கள் இன்றும் அவசியமான தேவையாக உள்ளது.
நல்ல நோட்டுகள்
ஏடிஎம்களில் பெரும்பாலும் கிழியாத, பாதிக்கப்படாத நல்ல ரூபாய் நோட்டுகளே வரும். ஆனாலும், ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது உங்களுக்கு கிழிந்த நோட்டுகள் வந்தால் என்ன செய்ய வேண்டும்? கிழிந்த நோட்டுகளை கடைக்காரர்களும், வியாபாரிகளும் வாங்கமாட்டார்கள்.
கிழிந்த நோட்டுகள்
எனினும், வங்கிகளில் கிழிந்த, பாதிக்கப்பட்ட நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். இதற்கான விதிமுறைகளையும் ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது. ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி, வங்கிக் கிளைகளில் கிழிந்த அல்லது பாதிக்கப்பட்ட நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டு வாங்கிக்கொள்ளலாம்.
அபராதம்
வங்கிகளால் கிழிந்த நோட்டை மறுக்க முடியாது. கிழிந்த ரூபாய் நோட்டை ஏற்க மறுக்கும் வங்கிக்கு அபராதம் விதிக்கப்படும் என்பது ரிசர்வ் வங்கியின் விதிமுறை. ஒரு ஏடிஎம்மில் கிழிந்த நோட்டு, பாதிக்கப்பட்ட நோட்டு, கள்ள நோட்டு வந்தால் அது அந்த வங்கியின் பொறுப்பு என ரிசர்வ் வங்கி சொல்கிறது.
எனவே, ஏடிஎம்மில் கிழிந்த நோட்டு, பாதிக்கப்பட்ட நோட்டு, பாதி நோட்டு, கள்ள நோட்டு போன்றவை வந்தால் அதை அந்த ஏடிஎம் சம்பந்தப்பட்ட வங்கியிலேயே கொடுத்து எளிதாக மாற்றிக்கொள்ளலாம். எனினும், தீயால் கடுமையாக எரிந்த ரூபாய் நோட்டை மாற்ற முடியாது. தீயில் எரிந்த நோட்டை ரிசர்வ் வங்கியில் மட்டுமே மாற்ற முடியும்.
மேலும் படிக்க...
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சயனைடை விட 6,000 மடங்கு - அதிக நச்சுள்ள உலகின் கொடிய தாவரம்!