இன்றைய நவீன உலகை மொபைல் போன் ஆள்கிறது என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு அனைவரது கைகளிலும் மொபைல் போன் இடம் பிடித்து விட்டது. புதுப்புது அம்சங்களுடன் பல வித ரகங்களில், நாளுக்கு நாள் புதிய வகை மொபைல் போன்கள் அறிமுகமாகி கொண்டே இருக்கிறது. முந்தைய காலங்களில் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால், அது அவ்வளவு எளிதாக முடியாது. ஆனால், இன்றோ நினைத்த நொடியிலேயே குறுஞ்செய்தி அனுப்பவும், டயல் செய்து பேசவும் முடிகிறது. அதிலும், அனைவரது மொபைல் போனிலும் வாட்ஸ்அப் செயலி இருக்கிறது.
வாட்ஸ்அப் (What'sapp)
32 நபருக்கு வாய்ஸ் கால், நேரடி குறுஞ்செய்தி, குரூப் அட்மினுக்கு கூடுதல் சலுகைகள் உள்பட, பல்வேறு புத்தம் புதிய வசதிகளை அறிமுகம் செய்ய இருக்கிறது வாட்ஸ்அப். உலக அளவில் அதிக மக்கள் பயன்படுத்தும் ஒரு செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள மிகவும் உவியாக இருந்து வருகிறது. மெட்டா நிறுவனத்தின் இந்த செயலியில் குறுஞ்செய்தி, வாய்ஸ் உரையாடல்கள், ஆடியோ, வீடியோ கால் செய்யும் வதிகள் உள்ளன. மேலும், புகைப்படங்கள் மற்றும் டாக்குமெண்ட்ஸ் அனுப்பும் வசதியும் உண்டு. இதுவரையில், ஃபைல்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் இருந்தால் மட்டுமே அனுப்ப முடியும். அதிக அளவு கொண்ட ஃபைல்களை அனுப்ப முடியாது. இந்தக் குறையை பூர்த்தி செய்யும்படி பயனர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், இதற்கு தீர்வு காண, புது விதமான அப்டேட்டுகளை வாட்ஸ் அப் அறிவித்திருக்கிறது.
அப்டேட்ஸ் (Updates)
வாட்ஸ்அப்பில் இனிமேல், 2ஜிபி வரையிலான ஃபைல்களையும் அனுப்பும் வசதியுடன், அப்டேட் செயப்பட்டுள்ளது. இந்த செயலியில் புதிய நபர்களின் மொபைல் எண்ணை, சேவ் செய்யாமல், அந்த நபருக்கு ‘நேரடியாக குறுஞ்செய்தி’ செய்யும் புதிய வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், குறுஞ்செய்திகளுக்கு ரியாக்சனை வெளிப்படுத்த, இமோஜி வசதியையும் வாட்ஸ்அப் அறிமுகம் செய்கிறது.
வாட்ஸ்அப் குரூப்பில், பதிவிடப்படும் தேவையற்ற தகவலை நீக்க, குழுவின் அட்மினுக்கு அனுமதி அளிக்கும் வசதியும் அறிமுகமாகிறது. மேலும், வாட்ஸ்அப் குரூப் வாய்ஸ் காலில், ஒரே நேரத்தில் 32 பேர் வரை பங்கேற்கும் வசதியும், பல வாட்ஸ் அப் குரூப்களை கையாளும் வசதியும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
எங்கே போனது மீண்டும் மஞ்சப்பை திட்டம்: தொடர்கிறது பிளாஸ்டிக் ஆதிக்கம்!