Senior Citizens Tax-Saving FDs பலருக்கும் தங்களின் சேமிப்பு மிகவும் பாதுகாப்பாகவும் அதே நேரத்தில் சிறந்த ரிட்டர்ன்ஸ்களை தரக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றூ விரும்புவார்கள். அப்படிப்பட்ட பலருக்கும் சிறப்பான வருமானத்தை வழங்கும் திட்டமாக இருக்கிறது ஃபிக்ஸ்ட் டெபாசிட். சில ஆண்டுகளாக ஃபிக்ஸ்ட் டெபாசிட்டிற்கு வழங்கப்படும் வட்டி விகிதமானது குறைந்து வருகிறது. இருந்தாலும் பலருக்கும் சிறப்பான வரிச்சலுகைகளை வழங்கும் முதலீட்டு திட்டமாக இது இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வருமான வரி
கூடுதலாக, FD களில் இருந்து வரும் வருமானம் முதலீட்டாளரின் வருமான வரி அடுக்கு விகிதத்தின்படி முழுமையாக வரி விதிக்கப்படும், இது உண்மையான வருமான விகிதத்தை மேலும் குறைக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், முதலீட்டாளர்கள், குறிப்பாக மூத்த குடிமக்கள், நிலையான வைப்புத்தொகையின் வசதியை மட்டுமின்றி, வரிச் சலுகைகளையும் வழங்கும் வரிச் சேமிப்பு நிலையான வைப்புகளைத் தேர்வு செய்யலாம்.
வரி சேமிப்பு FDகள் ஐந்து வருட லாக்-இன் காலத்துடன் வருகின்றன. வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் ஒரு நிதியாண்டில் ரூ. 1.5 லட்சம் வரையிலான வரிச் சலுகையைப் பெறலாம். மூத்த குடிமக்களுக்கு பொதுவாக 0.5% p.a. வழக்கமான வரி சேமிப்பு FD வட்டி விகிதங்களை விட அதிகம். ஆனாலும் 5 ஆண்டுகளுக்கு முன்பே வைப்புத்தொகையை திரும்பப் பெற இயலாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கூட்டு முறை
நிலையான வைப்பு கணக்குகளை தனிநபர்கள் மற்றும் இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் (HUFs) தனியாகவோ அல்லது கூட்டாகவோ கணக்குகளை துவங்க இயலும். எவ்வாறாயினும், ‘கூட்டு’ முறையில் கணக்கு வைத்திருக்கும் பட்சத்தில், ப்ரைமரி ஹோல்டர் மட்டுமே வரி விலக்கு பலன்களைப் பெற முடியும்.
கூடுதலாக, முதலீட்டாளரின் ஸ்லாப் விகிதத்தின்படி FD வருமானத்தில் TDS பொருந்தும் என்பதைய்ம் நினைவில் கொள்ளுங்கள். ஆனால் மூத்த குடிமக்கள் ஃபார்ம் 15எச்-ஐ சமர்பித்து இதில் இருந்து தப்பித்துக் கொள்ள இயலும். மூத்த குடிமக்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, I-T சட்டத்தின் 80TTB பிரிவின் கீழ் வைப்புத்தொகையின் வட்டி வருமானத்தில் ரூ.50,000 கூடுதல் வரி விலக்கு பெறலாம்.
மேலும் படிக்க
வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு மாற்ற சரியாக திட்டமிடுவது எப்படி?