திருடச் சென்ற வீட்டில் எதுவும் கிடைக்காத விரக்தியில் வீட்டின் உரிமையாளருக்குத் திருடன் கடிதம் எழுதிவைத்துச் சென்ற சம்பவம் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
துணை ஆட்சியர் (Deputy Collector)
மத்தியப் பிரதேசம் மாநிலம் தேவாஸ் மாவட்டத்தின் காடேகான் நகரில் துணை ஆட்சியர் வீடு உள்ளது. கடந்த இரு வாரங்களாக வெளியூர் சென்ருவிட்டு வீடு திரும்பினார்.
சிதறியப் பொருட்கள் (Scattered materials)
கதவைத் திறந்து வீட்டிற்குச் சென்ற கலெக்டருக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. வீட்டில் உள்ள பொருட்கள் கலைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பூட்டப்பட்டிருந்த வீட்டில் யாரோ நுழைந்து எதையோத் தேடியிருப்பதுத் தெரியவந்தது.
வைரலாகும் புகைப்படம் (Photo goes viral)
இதையடுத்து போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்தப் போலீசார் சோதனையில், ஒரு கடிதம் சிக்கியது. அதில், பணம் இல்லாத வீட்டுக்கு பூட்டு எதுக்கு கலெக்டரே? என எழுதப்பட்டு இருந்தது. இந்த கடிதத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விரக்தியும், கடுப்பும் (Frustration and hardship)
இந்தக் கடிதம் பணம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தத் திருடன் எவ்வளவு விரக்தியும், கடுப்பும் ஆனான் என்பதை அச்சிட்டுக் காட்டியது.
திருடச் சென்ற வீட்டில் எதுவும் கிடைக்காத விரக்தியில் கடிதம் எழுதி வைத்துச் சென்ற திருடனின் செயல் அப்பகுதி மக்களுக்கு வேடிக்கையை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க...
வாழை மரத்தில் இருந்து கீழே விழுந்தத் தொழிலாளி- ரூ.4.கோடி இழப்பீடு!