Blogs

Monday, 04 October 2021 11:43 AM , by: Elavarse Sivakumar

தம்மை ஏமாற்றியக் கணவனை மனைவி கொல்லலாம் என்பன போன்ற வித்தியாசமான சட்டங்கள் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றுள்ளன.

அனைத்திலும் மாறுபாடு (Variation in everything)

நாட்டிற்கு நாடு, மொழி, உணவு, உடை, கலாச்சாரம், பழக்க வழக்கம், பாரம்பரியம் உள்ளிட்டவை மாறுபடுவதைப் போல, சட்டத்திட்டங்களும் வேறு படுகின்றன.

இருப்பினும், ஆதிகாலத்துச்சட்டங்கள் எப்போது, ஆண்களுக்கு சாதகமான சட்டங்களே. ஏனெனில், அவை ஆண்களால் உருவாக்கப்பட்டவை என்பதே உண்மை.

பெண்ணிற்கு நியாயம் (Justice for the woman)

குறிப்பாக வஞ்சிக்கப்படும் பெண்ணிற்கு நியாயம் வழங்கவும், பாதுகாப்பு அளிக்கவும், சட்டங்கள் மிக மிக அவசியமான ஒன்று. அந்த வகையில், வெளிநாட்டுச் சட்டங்களை ஆராய்ந்தால், நமக்கு வியப்பு அளிக்கும் சட்டங்கள் பல நடைமுறையில் உள்ளன.

விநோத சட்டங்கள் (Bizarre laws)

நாம் ஒரு புதிய நாட்டிற்கு செல்லும் போது அந்நாட்டில் உள்ள பலவிதமான கலாச்சாரங்கள் நம்மை ஆச்சரியமூட்டும். அதேபோல அந்நாட்டு சட்டத்திட்டங்களும் நமக்கு வியப்பை கொடுக்கும். ஆனால், சில சட்டங்கள், அட இதுக்கு நம்ப நாடே பரவாயில்ல போல என்ற எண்ணத்தை கொடுக்கும். அத்தகைய விநோத சட்டங்கள் இதோ!

முன்பதிவு அவசியம் (Booking is required)

கனடா நாட்டில் ஒரு எல்லைக்குள் ஒருவர் இறந்தால் அது குற்றமாக கருதப்படுகிறது.காரணம், ஒருவர் தான் இறந்த பிறகு தன் உடலை அடக்கம் செய்ய தன்னுடைய உடலுக்கான இடத்தை முன்னதாகவே பதிவு செய்திருக்க வேண்டும். ஒருவேளை அப்படி பதிவு செய்யாமல் யாராவது இறந்தால் அவர்கள் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள்.

Laser Underwear என்ற மெல்லிய உள்ளாடை அணிவது ஜெர்மனியில் 2008 முதல் சட்டவிரோதமான ஒன்றாக கருதப்படுகிறது.

ஏமாற்றப்படும் மனைவி

ஹாங்காங் நாட்டில் கணவன் தம்மை ஏமாற்றுவது தெரிந்தால் மனைவிக்கு அவரை கொல்ல சட்டப்படி அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

வல்லுறவு (Rape)

சமோவா நாட்டில் மனைவியின் பிறந்த நாளை மறப்பது மற்றும் மனைவி மீதான பாலியல் வல்லுறவு என்பன தண்டனைக்கு உரிய குற்றமாக கருதப்படுகிறது.

சுத்தம் (Cleaning)

தூய்மை கடைப்பிடிப்பில் அதிக அக்கறை கொண்ட சிங்கப்பூரில் சூயிங்கம் கொண்டு செல்வதும், அதனை மெல்வதும் சட்டப்படிக் குற்றமாகும்.

மேலும் படிக்க...

மது குடித்த சிறுவன் மரணம்- தாத்தாவும் உயிரிழப்பு!

டிரெண்டிங் மோகம் - ரைஸ் குக்கரைத் திருமணம் செய்து கொண்ட நபர்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)