Blogs

Thursday, 30 June 2022 06:58 AM , by: Elavarse Sivakumar

ஆயுள் காப்பீட்டு பணத்திற்காக வெளிநாட்டில் உள்ள கணவன் உயிரிழந்ததாக கூறி ரூ.25 லட்சத்தை சுருட்டியிருக்கிறார் இந்த மனைவி. காசுக்காகக் கட்டிய கணவன் இறந்துவிட்டதாக மனைவி நாடகமாடிய சம்பவம் மேற்கு வங்க மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பணம் கிடைக்கும் என்றால் எதையும் செய்ய மக்கள் துணிந்துவிடுவார்கள் போலும். இங்கே காசுக்காகக் கட்டிய கணவனைக் கொன்றுவிட்டார் மனைவி ஒருவர். மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியை சேர்ந்தவர் நுர்ஜமால் ஷேக். இவர் மனைவி ஷஹினா கதும். கடந்த 5 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் நுர்ஜமால் ஷேக் பணியாற்றி வருகிறார்.

இந்தியா வர முடியாது

கணவர் வெளிநாடு சென்ற பிறகு அவருடன் பேசுவதை படிப்படியாக குறைத்த மனைவி ஷஹினா ஒரு கட்டத்தில் கணவருடனான தொடர்பை முற்றிலும் துண்டித்துக்கொண்டார். மேலும், கணவரால் உடனடியாக இந்தியா வர முடியாது என்பதை தெரிந்துகொண்ட அவர் நுர்ஜமால் பெயரில் உள்ள ஆயுள் காப்பீட்டு பணம் மற்றும் வங்கி சேமிப்பில் உள்ள பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டினார்.

ரூ.25 லட்சம்

இதற்காக உயிருடன் இருக்கும் கணவன் மரணம் அடைந்துவிட்டதாக கூறி போலி சான்றிதழ் தயாரித்துள்ளார். இதை வைத்து வங்கியில் உள்ள பணம் மற்றும் ஆயுள் காப்பீட்டு பணம் என ரூ.25 லட்சத்தை பெற்று மோசடி செய்துள்ளார்.

இதனிடையே 5 ஆண்டுகள் கழித்து சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா வந்த நுர்ஜமால் வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருந்த பணத்தை எடுக்க முயன்றுள்ளார். அப்போது வங்கி மேலாளர் மூலம் உண்மை தெரியவந்தது.
உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று மனைவி மீது நுர்ஜமால் புகார் அளித்தார்.

புகார்

அதில், தனது மனைவிக்கும் வேறொரு நபருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தனது பணத்தை எல்லாம் சுருட்டிக்கொண்டு தலைமறைவான அவரை கண்டுபிடித்து நீதி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

1 ரூபாய் நோட்டுக்கு ரூ.45,000 - வாங்க நீங்க ரெடியா?

தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம் - மீறினால் அபராதம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)