மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 September, 2022 12:23 PM IST

மரணம் என்பது நம்மை நிலைகுலையச் செய்துவிடுகிறது. அதனை எதிர்கொள்ளத் துணிவும், மன தைரியமும் அவசியம். ஆனால் எதிர்பாராதவிதமாக நிகழும் மரணங்கள், தனது வாழ்க்கைத்துணையின் மனநலம் பாதிக்கப்படும் அளவுக்கு துயரத்தை அளிக்கிறது என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் ராவத்பூர் பகுதியை சேர்ந்தவர் விம்லேஷ் குமார் டிடெக்ஸ். வருமானவரித்துறை ஊழியரான இவருக்கு கடந்த ஆண்டு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அவரை குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர்.

உடல் ஒப்படைப்பு

ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விம்லேஷ் குமார் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு விம்லேஷ் குமாரின் உடல் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஏற்க மறுத்த மனம்

ஆனால், தனது கணவர் விம்லேஷ் குமார் உயிரிழக்கவில்லை என்றும் அவர் கோமாவில் இருப்பதாக அவரது மனைவியும், குடும்பத்தினரும் கருதியுள்ளனர். இதனால், மருத்துவமனையில் இருந்து உடலை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர் விம்லேஷின் உடலை அடக்கம் செய்யமால் ராவத்பூரில் உள்ள வீட்டிலேயே வைத்துள்ளனர். வீட்டில் விம்லேஷின் அறையில் அவரது உடலை வைத்த அவரது மனைவி, குடும்பத்தினர் அந்த உடலுடன் கடந்த 18 மாதங்களாக வாழ்ந்து வந்துள்ளனர்.

சந்தேகம் அடைந்த அதிகாரிகள்

அக்கம்பக்கத்தினர் கேட்டபோது தனது கணவர் கோமாவில் உள்ளதாகவும் அவர் விரைவில் மீண்டு வருவார் எனவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார். அவ்வப்போது, ஆக்சிஜன் சிலிண்டரையும் குடும்பத்தினர் வீட்டிற்குள் கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், விம்லேஷ் குமார் உயிரிழந்தபோதும் அவரது குடும்ப ஓய்வூதியம் தொடர்பான ஆவணங்கள் எந்த வித முன்னேற்றமும் இன்றி அலுவலகத்திலேயே தேங்கி கிடப்பதாகவும், இதில் சந்தேகம் உள்ளதாகவும் இது குறித்து விசாரிக்கும்படி கான்பூர் வருமானவரித்துறை அலுவலகத்தில் இருந்து தலைமை மருத்துவ அதிகாரிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

திடீர் சோதனை

இதனை தொடர்ந்து போலீசார், மருத்துவக்குழுவினர் உள்பட அதிகாரிகள் அடங்கிய குழு ராவத்பூரில் உள்ள விம்லேஷ் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போதும், விம்லேஷ் உயிருடன் உள்ளதாகவும், அவர் கோமாவில் உள்ளதாகவும் குடும்பத்தினர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, வீட்டில் உள்ள ஒரு அறையில் கிட்டத்தட்ட அழுகிய நிலையில் விம்லேஷின் உடல் படுக்கையில் வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அந்த உடலை மீட்ட அதிகாரிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விம்லேஷ் குமாரின் மனைவியிடம் விசாரணை நடத்தினர்.

மனநல பாதிப்பு

மேலும், அவர் மனநலம் தொடர்பான பிரச்சினையில் இருப்பதை கண்டறிந்த மருத்துவத்துறையினர் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், விம்லேஷ் குமாரின் குடும்பத்தினருக்கும் மன நலம் சார்ந்த ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. 18 மாதங்களுக்கு முன் உயிரிழந்த நபர் உயிருடன் மீண்டு வருவார் என அவரது உடலுடன் வந்த மனைவி மற்றும் குடும்பத்தினர் வாழ்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க...

அதிவேகமாக பரவும் ஃபுளூ வைரஸ் - தற்காத்து கொள்வது எப்படி?

ஓய்வூதிதாரர்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு- 10 நாட்கள் மட்டுமே அவகாசம்!!

English Summary: Wife who lived with a corpse for 18 months!
Published on: 24 September 2022, 12:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now