பாரத் பெட்ரோலியம் நிறுவனம், தனியாருக்கு விற்பனை செய்யப்பட்ட பிறகு, அந்நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வைத்திருப்போருக்கு, அரசின் மானிய சலுகை (Subsidy) கிடைக்குமா; கிடைக்காதா என்ற குழப்பம், வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பாரத் பெட்ரோலிய அதிகாரிகளின் தகவல்:
பாரத் பெட்ரோலியத்தை வாங்கும் நிறுவனம், சமையல் எரிவாயு வணிகத்தை, மூன்று ஆண்டுகளுக்கு பிறகும் தக்க வைத்துக் கொள்ள விரும்பும்பட்சத்தில், பாரத் பெட்ரோலிய வாடிக்கையாளர்களுக்கு, அரசின் மானிய (Subsidy) உதவி அப்படியே தொடரும் என்று பாரத் பெட்ரோலிய உயரதிகாரிகள் கூறியுள்ளனர்.
மானியச் சலுகை:
புதிய நிறுவனம் சமையல் எரிவாயு வணிகத்தை (Cooking gas business) தொடர விரும்பாதபட்சத்தில், வாடிக்கையாளர்கள் கணக்கு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (Indian Oil Corporation) மற்றும் ஹிந்துஸ்தான்
பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (Hindustan Petroleum Corporation) ஆகிய நிறுவனங்களுக்கு மாற்றப்படும். மானியச் சலுகையும் தொடரும். பாரத் பெட்ரோலியம் தனியார் மயமானாலும், நிறுவனத்தின், 7.3 கோடி சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களுக்கான மானியத்தை (Subsidy) தொடர்வதில் அரசு உறுதியாக இருக்கிறது. இந்த குழப்பங்களை தவிர்க்கும் பொருட்டு, நிறுவனத்தின் சமையல் எரிவாயு வணிகத்தை, ஒரு புதிய துணை நிறுவனமாக்கி, அதன் கணக்குகளை தனியாக பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் மூலம் உரிய கண்காணிப்புடன், மானியம் வழங்கப்படும்.
வணிகத்தை தொடர்வதா? விடுவதா?
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, வணிகத்தை தொடருவதா இல்லை, விடுவதா என்பது குறித்து புதிய நிறுவனங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம். ஆனால், வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் மானியம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க