புதிராகப் பரவி வரும் கொரோனா வைரஸ் நம் நாட்டில் வைரஸ் பரவல் வேகமெடுக்க வாய்ப்பில்லை, என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, கொரோனாவின் இந்த அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுமோ என்று அச்சத்தில் உறைந்திருந்த மக்களுக்கு சற்று ஆறுதலைத் தந்துள்ளது.
6-ம் அலை (6th wave)
நம் நாட்டில், கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்நிலையில், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின், வைரஸ் ஆய்வு பிரிவின் தலைவர் டாக்டர் நிவேதிதா குப்தா கூறியதாவது:
இந்தியாவில், கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களுக்கு செலுத்தப்படும் 'கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின்' தடுப்பூசிகளால் தான், இது சாத்தியமாகியிருக்கிறது. ஹாங்காங், கனடா நாடுகளில், கொரோனா பரவலின் ஐந்து மற்றும் ஆறாம் அலை சென்று கொண்டிருக்கிறது. இந்த நாடுகளில், கொரோனாவை கட்டுப்படுத்த முறையான திட்டங்கள் வகுக்கப்படாதது தான் இதற்கு காரணம்.
பூஸ்டர் டோஸ் (Booster Dose)
இந்தியாவைப் பொருத்தவரை, ஒமைக்ரான் வகைகளை தவிர, மரபணு மாறிய புதிய வகை கொரோனா வைரஸ் எதுவும் பரவவில்லை. எனவே, வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்க வாய்ப்பில்லை.
முகக்கவசம் (Mask)
எனினும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்வது ஆகியவற்றை நாம் முறையாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.'
பூஸ்டர் டோஸ்களை, குறைவான மக்களே செலுத்திக் கொள்கின்றனர். இது, நல்ல அறிகுறி அல்ல.எனவே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ்களை உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.15,000 மானியம்!
தரித்திரம் தொற்றிக்கொள்ளும் செடிகள்- இவற்றை வளர்க்க வேண்டாம்!