
வங்கிக் கணக்கில் 2700 கோடி ரூபாய் வந்திருப்பதாகக் கூறிய எஸ்எம்எஸ்-யைப் பார்த்த தொழிலாளிக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. வங்கிகள் இதுபோன்ற அதிர்ச்சியை வங்கிக்கணக்காளர்களுக்கு அடிக்கடிக் கொடுப்பதுதான் வேடிக்கையின் உச்சம்.
பொதுவாக, வங்கிக் கணக்கில் 200 ரூபாய் இருக்கிறது என்றால், அதில் 100 ரூபாய் எடுத்துவிட்டால் மீதம் 100 ரூபாய் இருப்பது உலக வழக்கம். ஆனால், 100 ரூபாய் எடுத்தபின் வங்கிக் கனக்கில் 2700 கோடி ரூபாய் பேலன்ஸ் இருக்கிறது என செய்தி வந்தால் எப்படி இருக்கும்? இதயமே நின்றுவிடும் போல் ஆகுமல்லவா? அப்படியொரு அனுபவம்தான் இந்தத் தொழிலாளிக்கு கிடைத்தது.
SMSஇல் அதிர்ச்சி
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிஹாரில் லால் என்பவர் ராஜஸ்தானில் செங்கல் சூளை தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.எனினும், பருவமழைக்காலத்தில் செங்கல் சூளை மூடப்பட்டுள்ளதால் உத்தரப் பிரதேசத்தில் தனது சொந்த ஊருக்கே திரும்பிவிட்டார். இவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து ஏடிஎம்மில் 100 ரூபாய் பணம் எடுத்துள்ளார்.
ஆனால் பணம் எடுத்தபின் வந்த SMSஇல் அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது, தனதுவங்கிக் கணக்கில் 2,700 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பேலன்ஸ் இருப்பதாக பிஹாரி லாலுக்கு SMS வந்துள்ளது. சரியாக 27,07,85,13,985 ரூபாய் அவர் கணக்கில் இருப்பதாக மெசேஜ் வந்துள்ளது.
நீடிக்காத சந்தோஷம்
இதன்பின் வங்கிக் கிளை மேலாளரை அணுகியுள்ளார். வங்கி மேலாளர் பார்த்தபோதும் 2,700 கோடி ரூபாய்க்கு மேல் பணம் இருப்பது உறுதியானது.இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தால். ஆனால், இவ்வளவு பணம் கிடைத்த மகிழ்ச்சி நெடுநேரம் நீடிக்கவில்லை. இன்னொரு வங்கிக் கிளைக்கு சென்று பார்த்தால் தனது கணக்கில் 126 ரூபாய் மட்டுமே இருந்ததாக தெரியவந்துள்ளது.
தொடரும் தவறுகள்
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், ஏன் தவறுதலாக பேலன்ஸ் தொகை காட்டியது என்பது குறித்து ஆய்வு நடந்து வருவதாகவும் சம்பந்தப்பட்ட வங்கியின் மாவட்ட நிர்வாகி தெரிவித்துள்ளார்.வங்கியைப் பொருத்தவரை, இதுபோன்ற தவறுகள் நடப்பது வழக்கமானதாக மாறி வருகிறது. எனவே நாம்தான் கொஞ்சம் கூடுதல் ஊஷாராக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க...
விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!