Blogs

Saturday, 04 January 2020 11:31 AM , by: Anitha Jegadeesan

தற்போது நிலவி வரும் பனிக்காலம் மனிதர்களை மட்டுமல்லாது கால்நடைகளையும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்குகிறது. இதனை எதிர்கொள்ள கால்நடை அறிவியலாளர்கள் மற்றும் கால்நடை பராரிப்புத்துறை யினர் பல்வேறு ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை வட்டாரத்தில் பனி பொழிவு இருப்பதால்  செம்மறி ஆடுகளை பராமரிப்பது குறித்து  கால்நடை பராமரிப்பு துறை பல்வேறு ஆலோசனை வழங்கியுள்ளது.

ஆட்டுப் பட்டி அமைக்கும் பொழுதே சரியான திட்டமிடலுடன் அமைக்க வேண்டும். இல்லாவிடில்  வளர்ச்சி குன்றுதல், சளி, இருமல், வாய்புண் நோய், புழு புண் போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளாகி ஆடுகள் இறந்து விடவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, ஆடு வளர்ப்பவர்கள் பின்வரும் முறைகளை பின்பற்றி இழப்பை தவிர்க்கலாம்.

  • ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆட்டுப் பட்டியை அகலமாகவும், விசாலமாகவும் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் இட நெருக்கடியின் காரணமாக பல உபாதைகளும் உற்பத்தி இழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறைந்த பட்சம் ஒரு ஆட்டுக்கு 4 சதுர அடி என்னும் வீதத்தில் இட அளவு விட்டு கொட்டகை அமைக்கப்பட வேண்டும்.
  • காலையில் பட்டிக்குள் இளம் வெயில் விழும்படி கொட்டகை அமைக்கப்பட்டு இருப்பது அவசியம் ஆகும். கிழக்குப் பகுதியில் வெற்றிடம் விட்டு கொட்டகை அமைப்பதன் மூலம் இந்த இளம் வெயில் கொட்டகையின் உள் விழுவதை உறுதி செய்யலாம்.
  • பட்டிக்கு மூன்றில் ஒரு பங்கு அளவு மட்டும் சாக்கு அல்லது படுதா போடுவதே போதுமானது. இதன் மூலம் நல்ல காற்றோட்டம் கிடைப்பதையும் உறுதி செய்யலாம்.
  •  தென்னந்தோப்பு, மாந்தோப்பு போன்ற ஈரப்பதமான இடங்களில் பட்டி அமைக்காமல், மேடான இடத்தில் அமைத்து, தினமும் சுத்தப்படுத்த வேண்டும். இதனால் குலம்புகளில் புண் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
  •  பட்டி மற்றும் சுற்றுப்பகுதி, சாலை மற்றும் பெரிய ஆடுகளின் மீது டாக்டர் ஆலோசனைப்படி கைத்தெளிப்பான் மூலம் உண்ணி நீக்க மருந்து (பூச்சிக் கொல்லி) தெளிப்பது நல்லது. இதனால் வாய்புண் நோயை பரப்பும் பூச்சிக்கடி,புற உண்ணிகளை தவிர்க்கலாம்.
  • மாலையில் வேம்பு, யூக்கலிப்டஸ், தும்பை மற்றும் இலை சருகுகள் கொண்டு பட்டிக்கு புகை போடலாம். இயற்கையான இந்த நடவடிக்கையின் மூலமும் புற ஒட்டுண்ணிகளின்ன தாக்குதலை தவிர்க்க இயலும். இதனால் பக்க விளைவுகளும் ஏதும் இல்லை.

இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து ஆடுகளை பாதுகாத்து நஷ்டத்தை தவிர்க்கலாம் என தெரிவித்துள்ளனர்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)