Blogs

Thursday, 21 July 2022 10:39 PM , by: Elavarse Sivakumar

உங்களிடம் இந்த 50 பைசா நாணயம் இருந்தால் அதைக் கொடுத்து ரூ.1 லட்சம் பெற்றுக் கொள்ளலாம். பழைய பொருட்களுக்கு எப்போதுமே மவுசு கிடைக்கும் என நம்புகிறவரா நீங்கள்? அப்படியாக இருந்தால், பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை சேகரிக்கும் பழக்கம் இருக்கும். இந்தப் பழக்கம் இருந்தால் கோடிக்கணக்கில் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது.

ஏனெனில் சந்தையில் அரிய நோட்டுகள் மற்றும் நாணயங்களுக்கும் அதிக விலை கிடைக்கிறது. எனவே இத்தகைய நோட்டுகள் மற்றும் நாணயங்கள் இருக்கிறதா எனத் தேடுங்கள்.

அதிகத் தேவை

  • உங்களிடம் பழைய 50 பைசா நாணயங்கள் இருந்தால் அதை ஆன்லைன் விளம்பர போர்ட்டலான OLX வெப்சைட்டில் விற்று 1 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

  • 2011ஆம் ஆண்டில் வெளியான 50 பைசா நாணயத்துக்கு மட்டுமே இந்தப் பணம் கிடைக்கிறது.

  • இந்திய அரசாங்கம் 25 மற்றும் 50 பைசா நாணயங்களின் புழக்கத்தை நிறுத்திவிட்டது.

  • 2011இல் வெளியான 50 பைசா நாணயங்களுக்கு இப்போது அதிக தேவை ஏற்பட்டுள்ளது.

  • இதன் காரணமாக, மக்கள் இந்த நாணயத்தை சேகரிப்பதில் முனைப்பு காட்டுகின்றனர்.

  • உங்களிடம் இந்த நாணயம் இருந்தால், அதை விற்கலாம்.

விற்பது எப்படி?

  • பழைய நாணயத்தை விற்க, OLX வெப்சைட்டில் நீங்கள் ஒரு சுயவிவரத்தை உருவாக்க வேண்டும்.

  • அதன் பிறகு, உங்களிடம் உள்ள 50 பைசா நாணயத்தை புகைப்படம் எடுத்து அப்லோடு செய்ய வேண்டும்.

  • இந்த நாணயத்தை வாங்க ஆர்வமுள்ளவர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.

  • பிறகு நீங்கள் விற்க விரும்பும் தொகையை வாடிக்கையாளரிடம் பேசி வாங்கிக் கொள்ளலாம்.

மற்ற நிறுவனங்கள்

OLX மட்டுமல்லாமல், இந்தியாமார்ட் போன்ற இணையதளங்களிலும் நீங்கள் பழைய நாணயங்களையும் நோட்டுகளையும் விற்பனை செய்யலாம். எனினும் இதுபோன்ற வெப்சைட்களில் விற்பனை செய்யும் போது ஆன்லைன் UPI மோசடிகள் குறித்து எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

மேலும் படிக்க...

மரத்தடி வைத்தியரிடம் சிகிச்சை எடுத்துவரும் தோனி!

ஆடிப்பட்டத்தில் காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு- TNAU கணிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)