பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபருக்கு நீதிமன்றம் வழங்கிய வித்தியாசமான தண்டனை மற்றவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
வக்கிர எண்ணம்
பாலியல் பலாத்காரம், பாலியல் சீண்டல் உள்ளிட்ட வார்த்தைகள் , அண்மைகாலமாக அன்றாடச் செய்திகளை அலங்கரித்து, ஆண்களின் மனம் எவ்வளவு வக்கிரமானதாக மாறி வருகிறது என்பதைக் காட்டுகிறது.
விழிப்புணர்வு (Awareness)
இதற்கு பெண்களும் காரணம் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. இருப்பினும், பெற்றோரும், இது குறித்த விழிப்புணர்வைத் தங்கள் குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே ஏற்படுத்திவிடுவது, இவ்வகைப் பிரச்னைகளில் இருந்துப் பெண் பிள்ளைகள் தப்பிக்கப் பெரிதும் உதவும்.
சில்மிஷ மன்னன் (King of Silmisha)
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்தவர் லாலன் குமார் சபி (20). சலவைத் தொழிலாளரான இவர், சில மாதங்களுக்கு முன்பு, ஒரு பெண்ணை மானபங்கப் படுத்தினார். அவரை பாலியல் வன்கொடுமை செய்யவும் முயன்றுள்ளார்.
இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தனக்கு ஜாமீன் கோரி, அவர் ஜஞ்சார்புர் கூடுதல் செசன்ஸ் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நிதிபதி அவினாஷ் குமார், அதிரடியான நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்கினார்.
அது என்ன நிபந்தனை? (What condition is it?)
அதாவது, குமார் வசிக்கும் கிராமத்தில் உள்ள அனைத்துப் பெண்களின் சேலைகளையும் இலவசமாக குமார் ஆறு மாதத்துக்கு சலவை செய்ய வேண்டும். பின்னர் அதை இஸ்திரி செய்து ஒவ்வொரு வீட்டிலும் கொடுக்க வேண்டும். இதைக் கண்காணித்து ஊர் பஞ்சாயத்துத் தலைவர் நஜிமா நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த வித்தியாசமான தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்காணிப்பு (Tracking)
இதுகுறித்து நஜிமா கூறுகையில், இத்தீர்ப்பு பெண்களுக்கு மரியாதையை ஏற்படுத்திக்கொடுக்கும். அதோடு பெண்களுக்கு எதிராக மனநிலையில் இருப்பவர்களுக்குக் குற்ற உணர்வை ஏற்படுத்தும். எங்கள் கிராமத்தில் 225 பெண்கள் இருக்கின்றனர். இப்பெண்கள் சுழற்சி முறையில் தங்களது ஆடைகளை லாலனிடம் துவைக்க கொடுப்பார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க...