Blogs

Tuesday, 11 January 2022 11:21 PM , by: R. Balakrishnan

Yellow bag barota

பாலிதீன் பைகளை தவிர்க்க வலியுறுத்தி, மதுரை ஹோட்டலில் மஞ்சள் நிறத்தில் பை வடிவ பரோட்டா (Yellow Barota) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மஞ்சள் நிற பரோட்டா (Yellow Barota)

மதுரை, அழகரடி முக்குகடை கே.சுப்பு ஹோட்டல் உரிமையாளர் நவநீதன் கூறியதாவது: மக்களுக்கு விழிப்புணர்வு (Awareness) ஏற்படும் என சிந்தித்து, மஞ்சள் நிற பை வடிவில் பரோட்டா அறிமுகம் செய்துள்ளோம். இரண்டு சாதாரண பரோட்டா அளவில், பை வடிவ பரோட்டாவை தயாரித்து, 20 ரூபாய்க்கு விற்கிறோம்.

வாடிக்கையாளர் வாங்கும் ஐந்து பரோட்டா பார்சலுக்கு ஒரு முக கவசம், ஒரு பிரியாணிக்கு இரண்டு முக கவசங்கள், கிரில் சிக்கனுக்கு நான்கு முக கவசங்கள் இலவசமாக தருகிறோம்.

மஞ்சப்பை இலவசம் (Free Yellow Bag)

உணவுகளின் அளவு கூடினால், அதற்கு ஏற்றபடி முக கவசங்களை கூடுதலாக பெறலாம். இன்று முதல் 15 நாட்களுக்கு, 'பார்சல்' வாங்குவோருக்கு 10 ரூபாய் மதிப்புள்ள ஒரு மஞ்சப்பை இலவசம்.

மேலும் படிக்க

தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை: முதல்வர் தொடக்கி வைக்கிறார்!

மஞ்சளில் அதிக மகசூல் பெற குழித்தட்டு நாற்றாங்கால் உற்பத்தி

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)