Blogs

Sunday, 31 October 2021 11:33 AM , by: Elavarse Sivakumar

ஒவ்வொரு நாளும் 29 ரூபாயை முதலீடு செய்து ரூ.4 லட்சம் சம்பாதிக்கும் எல்.ஐ.சி. திட்டம் பெண்களுக்கான சிறந்தத் திட்டமாக உள்ளது.

முதலீடு (Investment)

மக்கள் எப்போதுமே தங்கள் பணத்தை முதலீடு செய்யும்போது, பாதுகாப்பாக இருக்குமா என்பதைவிட, பன்மடங்கு பெருகிக் கிடைக்குமா? என்பதையும் எதிர்பார்ப்பார்கள். அப்படி எதிர்பார்ப்பவர்களுக்கு இந்தத் திட்டம் சூப்பர் திட்டமாக உள்ளது.

அதிலும் நீங்கள் முதலீடு செய்யப் போவது, மத்திய அரசின் நிறுவனமாக எல்ஐசி என்பதால், உங்களது நம்பிக்கையும் அதிகரிக்கும்.

எல்ஐசி எனப்படும் ஆயுள் காப்பீட்டுக் கழகம் நிறையத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில் பெண்களுக்கான ஒரு சிறப்புத் திட்டம்தான் எல்.ஐ.சி. ஆதார் ஷீலா பாலிசி திட்டம்.

முதலீட்டாளர் யார்? (Who is the investor?)

  • 8 முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஆதார் எண் இருந்தால் போதும்.

  • இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.75,000 முதல் அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முதிர்வு காலத்துக்கான அதிகபட்ச வயது வரம்பு 70 ஆண்டுகள்.

  • இத்திட்டத்துக்கான பிரீமியம் தொகையை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு அளவில் செலுத்தலாம்.

  • உதாரணமாக, உங்களுக்கு இப்போது 30 வயது என்று வைத்துக் கொண்டால் நீங்கள் ஒரு நாளைக்கு 29 ரூபாய் வீதம் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும்.

டெபாசிட் தொகை (Deposit amount)

முதல் ஆண்டில் உங்களது டெபாசிட் தொகை ரூ.10,959 ஆக இருக்கும். அடுத்த ஆண்டில் நீங்கள் ரூ.10,723 செலுத்த வேண்டும். இப்படியே வருடாந்திர அளவிலோ, காலாண்டு அளவிலோ அல்லது மாதாந்திர அளவிலோ பிரீமியம் செலுத்தலாம்.

மொத்தம் 20 ஆண்டுகளில் நீங்கள் ரூ.2,14,696 செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் முதிர்வுக் காலத்தில் உங்களுக்குக் கிடைப்பதோ ரூ.3.97 லட்சம். இவ்வாறு எல்.ஐ.சி. நிறுவனத்தின் இந்த ஆதார் ஷீலா பாலிசி திட்டத்தில் பெண்கள் அதிக லாபத்தைப் பெறலாம்.

கொரோனா பாதிப்பு (Corona vulnerability)

பெண்களுக்கான சேமிப்புத் திட்டங்கள் குறைவாக இருக்கும் நிலையில், எல்.ஐ.சி. நிறுவனத்தின் இந்த பாலிசி அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நமக்குக் கொரோனா வைரஸ் ஆட்டம் காட்டி வருவதால், நம்முடைய முதலீட்டுக்கு பாதுகாப்பு என்பதைவிட எதிர்கால நிதிநெருக்கடியை சமாளிக்க உதவும் முதலீடு அவசியம் எனக் கருதுகின்றனர்.

அதாவது திடீரென நிதி நெருக்கடி ஏற்படும்போதோ அல்லது தங்களது ஓய்வுக் காலத்தில் ஏற்படும் நெருக்கடிகளைச் சமாளிக்கவோ இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்வது சிறந்தது என்பதை உணர்ந்து முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.

மேலும் படிக்க...

பக்கோடாவுடன் மொறு மொறு பல்லி- பகீர் ரிப்போர்ட்!

பட்டாசு வடிவில் சாக்லேட்டுகள்- தீபாவளியையொட்டி விற்பனை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)