புதிய PF விதியின் படி, கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் PF கணக்கிலிருந்து பணம் எடுக்க இனி மேல் சில நாட்கள் காத்திருக்கத் தேவையில்லை. மத்திய அரசின் இந்த அறிவிப்பு சந்தாதாரர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
கொடூரக் கொரோனா (Cruel corona)
இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா, கடந்த ஆண்டைவிட மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.நோய்யிற்கு சிகிச்சை, மருத்துவமனையில் அட்மிட், என பெரும் நிதிச்சுமையை மக்கள் சந்திக்க நேரிட்டது.
இத்தகைய நெருக்கடிக் காலத்தில், பணிக்குச் செல்லும் பலருக்கு பெரும் உதவியாக இருந்தது, EPFO எனப்படும் வருங்கால வைப்பு நிதிதான். எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்ளப் பக்காவாகக் கை கொடுத்தது.
இந்நிலையில் வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு வருங்கால வைப்பு நிதியின் (EPFO) விதிகளை மாற்றியுள்ளது.
EPFO புதிய விதி (EPFO New Rule)
இதன்படி, விண்ணப்பித்த ஒரு மணி நேரத்திற்குள் உங்கள் வங்கிக் கணக்கில் பிஎஃப் பணம் வந்துவிடும். முன்பணமாக ஊழியர்கள் 1 லட்சம் வரை திரும்பப் பெறலாம்.
ஒரு மணி நேரத்திற்குள் (Within an hour)
புதிய பிஎஃப் விதியின் படி, கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க மூன்று முதல் ஏழு நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. ஆனால் இப்போது ஒரு மணி நேரத்திற்குள் உங்கள் வங்கிக் கணக்கில் பிஎஃப் பணம் வந்துவிடும்.
மத்திய அரசு பிஎஃப் விதிகளை மாற்றியுள்ளது, அவசரக் காலங்களில் பிஎஃப் பணம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இந்தச் சேவையைப் பெற நீங்கள் அவசரநிலை காரணமாக பெற்ற பணத்திற்கான செலவைக் காட்ட வேண்டும்.
பில் தேவையில்லை (No bill required)
மருத்துவ அவசரகாலத்தில் செலவாகும் பணத்தை நீங்கள் செலுத்திய பிறகு, அதன் விவரங்களை EFFO அலுவலகத்திற்கு அனுப்பிய பிறகு, நீங்கள் பிஎஃப் தொகையில் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
ஆனால் தற்போது மருத்துவ அவசரகாலத்தில் பணம் தேவை என்றால், நீங்கள் எந்த விதமான பில்லையும் செலுத்த வேண்டியதில்லை.
மேலும் படிக்க..
தினமும் ரூ.74 சேமிக்கும் அருமையானத்திட்டம்
ரூ.7,000 கல்வி உதவித்தொகை -விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!