Blogs

Tuesday, 09 November 2021 10:18 AM , by: Elavarse Sivakumar

Credit : Bikewale

கல்லூரி மாணவரா நீங்கள்? உங்கள் நண்பர்கள் மற்றும் தோழிகளுக்கு மத்தியில், ஹீரோ மாதிரி வலம் வர ஆசைப்படுவரா நீங்கள்?

அப்படியானால் இந்த வெறும் ரூ.ரூ.29,000 கொடுத்து, இந்த Hero ஸ்கூட்டரை ஓட்டிட்டு போகலாம். தற்போது இரு சக்கர வாகனத் துறையில் ஏராளமான ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு உள்ளன. அதன்படி நீங்கள் சிறந்த தோற்றமுடைய மற்றும் சக்திவாய்ந்த ஸ்கூட்டரை வாங்க விரும்பினால், ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்கூட்டர் உங்களுக்கு சிறந்த சாய்ஸாக இருக்கும்.

Hero Maestro ஸ்கூட்டர் சிறப்பான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. Hero Maestro ஸ்கூட்டர் (ஷோரூமில்) அதன் ஆரம்ப விலை 85 ஆயிரம் ஆக பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஸ்கூட்டரை வெறும் 29 ஆயிரத்தில் வாங்கக்கூடிய அற்புதமான சலுகை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 109 சிசி எஞ்சின் கொண்ட ஹீரோ மேஸ்ட்ரோ பெட்ரோல் எரிபொருளில் இயங்குகிறது.

  • ஹீரோ மேஸ்ட்ரோ, லிட்டருக்கு 68 கிமீ மைலேஜ் கொடுக்கும் என்பது உறுதி.

  • ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்கூட்டர் 7.5 ஆயிரம் ஆர்பிஎம்மில் 8.20 பிஎச்பி பவரை உருவாக்கும் திறன் கொண்டது.

  • ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்கூட்டர் 5.5 ஆயிரம் ஆர்பிஎம்மில் 9.10 என்எம் டார்க்கை உருவாக்கும் திறன் கொண்டது.

  • ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்கூட்டரில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் உள்ளது.

என்ன சலுகை?

Hero Maestro இன் இந்த ஸ்கூட்டர் BIKES24 இல் பட்டியலிடப்பட்டுள்ளது. ஹீரோ மேஸ்ட்ரோவின் இந்த ஸ்கூட்டர் 2014 ஆம் ஆண்டின் மாடல் ஆகும். இது டெல்லியின் DL-05 RTO இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்கூட்டருடன் டூப்ளிகேட் சாவிகள் வழங்கப்படவில்லை. இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, அதன் ஆர்சி அசல் ஆகும்.

BIKES24 இணையதளத்தில் உள்ள தகவலின்படி ஹீரோ மேஸ்ட்ரோ செகண்ட் ஹேண்ட் ஸ்கூட்டரின் விலை 29 ஆயிரம் ரூபாய் மட்டுமே பட்டியல் இடப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் money back உத்தரவாதம் மற்றும் 12 மாத உத்தரவாதத்துடன் வருகிறது.

சலுகை

இந்த ஸ்கூட்டரின் ஸ்டைல் ​​மற்றும் மைலேஜுக்காக பலரால் விரும்பப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் வெள்ளை நிறத்தில் வருகிறது. ஸ்கூட்டருக்கு 12 மாதங்கள் வாரண்டியும் கிடைக்கும். குறைந்த விலையில் ஸ்கூட்டர் வாங்கி விரும்புபவர்கள் இந்தச் சலுகையைத் தவறாது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க...

வெறும் 21,000 ரூபாயில் Honda Activa

ரூ.5 லட்சத்திற்குள் சிறந்த மைலேஜ் வழங்கும் டாப் 5 கார்கள்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)