Blogs

Monday, 05 April 2021 06:28 PM , by: KJ Staff

Credit : Samayam

பிரிட்டிஷ் காலத்தில் அச்சிடப்பட்ட பழைய ஒரு ரூபாய் நாணயத்துக்கு பத்து கோடி ரூபாய் வரையில் கிடைக்கும். இந்த நாணயத்தை எங்கே விற்பது, எப்படி ஒரு கோடி சம்பாதிப்பது என்று இங்கே பார்க்கலாம்.

பழைய நாணயத்திற்கு பணம்!

பழைய நாணயங்களைச் சேகரித்து வைக்கும் பொழுதுபோக்கு பலரிடம் இருக்கும். அருங்காட்சியகம் போன்ற இடங்களிலும் பழைய நாணயங்களைச் (Old coins) சேகரித்து வைப்பார்கள். இது பலருக்கு நல்ல வாய்ப்பாக அமையும். உங்களிடம் பழைய, அரிய நாணயங்கள் இருந்தால் அவற்றை சம்பந்தப்பட்ட இடத்தில் நீங்கள் கொடுத்தால், லட்சம் - கோடி வரையில் நீங்கள் சம்பாதிக்க முடியும். இது பொழுதுபோக்கு என்றாலும் அதிர்ஷ்டம் இருந்தால் நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிடலாம். உங்களிடம் அரிய வகை நாணயம் இருந்தால் உடனடியாக இதைச் செய்யுங்கள்.

ஒரு ரூபாய் நாணயம்!

நீங்கள் இந்த நாணயங்களைக் கொடுத்து பணம் சம்பாதிக்க வேறு எங்கும் அலையத் தேவையில்லை. ஆன்லைன் மின்னணு வர்த்தக வலைதளங்களிலேயே நீங்கள் உங்களிடம் உள்ள நாணயத்தைக் கொடுத்து பணம் சம்பாதிக்க முடியும். உங்களிடம் பிரிட்டிஷ் (British) காலத்தில் அச்சிடப்பட்ட ஒரு ரூபாய் ரூபாய் நாணயம் இருந்தால், அதைக் கொடுத்து நீங்கள் 10 கோடி ரூபாய் வரையில் சம்பாதிக்கலாம். இந்த நாணயம் 1885ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நாணயமாக இருக்க வேண்டும்.

விற்கும் இடம்

OLX தளத்தில் இந்த நாணயத்தை விற்பனை செய்து நீங்கள் 10 கோடி வரையில் சம்பாதிக்கலாம். முதலில் OLX தளத்தில் இதற்காக நீங்கள் ஒரு அக்கவுண்ட் உருவாக்க வேண்டும். அதில் லாகின் (Login) செய்து இந்த நாணயத்தின் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த நாணயத்தை ஆன்லைன் மூலமாகவே ஏலத்தில் வாங்குவோர் அதற்குரிய தொகையை கொடுத்து உங்களிடம் வாங்கிக் கொள்வார்கள். இதில் ரூ.9.99 கோடி வரையில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

SBI வங்கியில் டெபிட் கார்டு இல்லாமல் ATM-ல் பணம் எடுக்கலாம்! எளிய வழிமுறை!

உலகின் விலை உயர்ந்த காய்கறியை விவசாயம் செய்த இந்திய விவசாயி! ஒரு கிலோ ரூ.85,000!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)