ஊரடங்கு காலத்தில் தான் விவசாயம் கற்றுக்கொண்டதாக இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அன்பிற்கினியாள் பட நடிகை கீர்த்தி பாண்டியன்.
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் பெரும்பாலான பிரபலங்கள் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் நடிகை கீர்த்தி பாண்டியன்.
நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் வெளியான அன்பிற்கினியாள் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். தமிழகத்தில் நற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இந்த ஊரடங்கில் தான் விவசாயம் கற்றுக்கொண்டதாக இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவு பதிவிட்டுள்ளார்.
அதில், Yet another skill learnt in #farming , thanks to the excessive rains this year. Obviously dragged the little one along!
And some after refreshments straight outta the tree
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த ஊரடங்கில் காலத்தில் தான் விவசாயம் கற்றுக் கொண்டதாகவும், இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததற்கு இயற்கைக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நெற்கதிர்களை கையில் வைத்திருப்பது போன்றும், வயலில் கதிர் அறுப்பதுமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.