போலிகள் அதிகரித்துள்ள நிலையில், உங்கள் ஆதார் அட்டையும் போலியாக உள்ளதா? என்பதை உடனே சரி பார்த்துக்கொள்ளுமாறு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை தடுக்கும் வகையில், , UIDAI முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அண்மை காலமாக போலி ஆதார் கார்டுகளைப் பயன்படுத்தி மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் போலியான ஆதார் கார்டு அல்லது நம்பர்களையே அவர்கள் பயன்படுத்துகின்றனர். எனவே, அதனை தடுப்பதற்காக, UIDAI முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டட்வீட்டில் கூறப்பட்டிருப்பதாவது:-
அனைத்து விதமான ஆகார் கார்டுகளையும் நேரடியாகவோ அல்லது ஆன்லைனிலோ check செய்யலாம். இ ஆதாரில் உள்ள QR கோட் ஸ்கேன் செய்யுங்கள். மேலும், https://myaadhaar.uidai.gov.in/verifyAadhaar என்கிற தளத்தில் 12 டிஜிட் ஆதார் நம்பரை பதிவிட்டு செக் செய்யுங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
check செய்வது எப்படி?
-
முதலில் UIDAIயின் https://resident.uidai.gov.in/offlineaadhaar தளத்திற்கு செல்ல வேண்டும்
-
அதில் ‘Aadhaar Verify’ ஆப்ஷன் கிளிக் செய்ய வேண்டும்.
-
இல்லையெனில், நீங்கள் நேரடியாக https://myaadhaar.uidai.gov.in/verifyAadhaar தளத்திற்கு செல்லலாம்.
-
தொடர்ந்து, 12 டிஜிட் ஆதார் எண் அல்லது 16 டிஜிட் virtual ID பதிவிட வேண்டும்.
-
அடுத்த திரையில், நம்பரை டைப் செய்துவிட்டு, திரையில் கேட்கப்படும் security codeஐ டைப் செய்தபிறகு, OTP நம்பர் verify கேட்கப்படும்.
-
ஆதாருடன் பதிவு செய்துள்ள மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணை பதிவிட வேண்டும்.
-
இந்த பிராசஸ் முடிவடைந்ததும், உங்கள் ஆதார் கார்டு உண்மையானதா அல்லது போலியா என்பது திரையில் தோன்றும்.
-
அத்துடன், உங்கள் பெயர், மாநில விவரம், வயது, பாலினம் என ஆதாரில் இடம்பெற்றிருக்கும் அனைத்து தகவல்களும் திரையில் தோன்றும்.
-
அதுமட்டுமின்றி, ஆதார் கடிதம்/ eAadhaar/ ஆதார் PVC கார்டில் எழுதப்பட்ட QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் ஆதாரை ஆப்லைனில் சரிபார்க்கலாம்.
மேலும் படிக்க...
கோடை வெப்பத்தைத் தகிக்க வைக்கும் தயிர்- எந்த நேரத்தில் சாப்பிடலாம்?
புற்றுநோய், சுகர் என பல நோய்க்குத் தீர்வு வேண்டுமா? இந்த ஒரு இலையே போதும்!