Farm Info

Wednesday, 27 April 2022 08:20 AM , by: Elavarse Sivakumar

நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 10,800 ரூபாய் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த தொகை, மாதம் 900 ரூபாய் வீதம் ஆண்டு முழுவதும் வழங்கப்பட உள்ளது. இந்த த்திட்டம் குறித்து தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு நிலையான வருமானம் வழங்கும் வகையில் அவர்களுக்கு மாதம் 900 ரூபாய் வழங்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் அறிவித்துள்ளார். எனினும், இந்த பணத்தை பெறுவதற்கு ஒரு நிபந்தனை உண்டு.


நிபந்தனை (Condition)

விவசாயிகள் மாதம் 900 ரூபாய் பெற வேண்டுமெனில் நாட்டு மாடுகளை வளர்க்க வேண்டும். இயற்கை விவசாயத்துக்கு நாட்டு பசு மாடுகள் அத்தியாவசியம் என்பதால் ஒரு நாட்டு பசு மாடாவது விவசாயிகள் வளர்க்க வேண்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

​மாதம் ரூ.900 (Rs.900 per month)

விவசாயம் தொடர்பாக நிதி ஆயோக் நடத்திய நிகழ்ச்சியில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் பங்கேற்று பேசினார். அப்போது அவர், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக விவசாயிகளுக்கு மாதம் 900 ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

நாட்டு பசு மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு மாதம் 900 ரூபாய் என ஆண்டுக்கு 10,800 ரூபாய் மொத்தம் வழங்கப்படும் என முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் தெரிவித்துள்ளார். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.

​இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான பணிகளை மத்திய பிரதேச அரசு விரைவில் தொடங்கும் எனவும் அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் 1.65 லட்சம் விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 - அமைச்சர் தகவல்

உடல் பருமனைக் குறைக்க உதவும் மாம்பழம்- இத்தனை நன்மைகளா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)