மதுரையில் உள்ள டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் தென்னை மரங்களில் இளநீர் காய்களைப் பறிக்கும் கருவி 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
100 % மானியம் (100% subsidy)
வேளாண்மைத்துறையின் அட்மா திட்டத்தில் தென்னை மரங்களில் இளநீர் காய்களைப் பறிக்கும் கருவி 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குனர் விமலா தெரிவித்ததாவது:-
தே.கல்லுப்பட்டி வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையில் அட்மா திட்டத்தில் இந்த கருவி வழங்கப்படுகிறது.
மானியம் பெறுவது எப்படி? (How to get a grant?)
-
ரூ.4000 ஆயிரம் மதிப்பிலான இந்த மரம் ஏறும் கருவியை விவசாயிகள் வாங்க வேண்டும்.
-
முழு விலை செலுத்தி இயந்திரத்தைப் பெற்றபின் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மானியத் தொகை வரவு வைக்கப்படும்.
-
இதற்கு, இயந்திரம் வாங்கிய பின் ஆதார் எண், கம்ப்யூட்டர் சிட்டா, வங்கி புத்தக நகலுடன் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
-
அவை சரிபார்க்கப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் மானியத்தொகை வரவு வைக்கப்படும்.
-
முன்னுரிமை அடிப்படையில் மானியம் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருவியின் முக்கியத்துவம் (The importance of the tool)
தென்னை, பனை உள்ளிட்ட உயரமான மரங்களில் காய்களைப் பறிப்பது என்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. மரம் ஏறி காய் பறிப்பதற்கான தொழிலாளர்கள் சரியான நேரத்தில் கிடைக்காததே இதற்குக் காரணம்.
இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண தென்னை, மரத்தில் ஏறும் கருவி பெரிதும் உதவியாக இருக்கும்.
பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் இந்தக் கருவியைப் பயன்படுத்திப் பாதுகாப்பாக மரத்தின் உச்சிக்கு சென்று காய்களைப் பறிக்க முடியும்.
30 முதல் 40அடி உயரமுள்ள மரத்தில் சுமார் 15 நிமிட நேரத்துக்குள் ஏறி, இறங்கலாம். அவ்வாறு ஏறுவதற்கு எளிமையான முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் 50 முதல் 60 மரங்கள் வரை இந்தக்கருவியைப் பயன்படுத்தி ஏற முடியும்.
மேலும் படிக்க...
இன்றும் நாளையும் மிக கன மழை எச்சரிக்கை- சென்னைக்கு ரெட் அலர்ட்!
Freezer Boxல் வைக்கப்பட்ட உடல்: 7 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் இருந்த அதிசயம்!