Farm Info

Saturday, 13 May 2023 09:01 AM , by: R. Balakrishnan

100% Subsidy

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலை உதவி இயக்குநர் எஸ்.திவ்யா தெரிவித்துள்ளார்.

சொட்டு நீர்ப்பாசனத் திட்டம் (Drip Irrigation scheme)

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாரத்தில், அதிக அளவிலான தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் இருக்க கூடிய தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பளவில் சாகுபடி செய்து, இலாபமடைய சொட்டு நீர்ப்பாசனத் திட்டம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 228 ஹெக்டர் நிலங்களுக்கு, சொட்டு நீர்ப்பாசனத்திற்காக 1 கோடியே 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சொட்டு நீர்ப்பாசனம் அமைக்காத விவசாயிகள், தோட்டக்கலைத் துறையை அணுகி, மானியத்தில் புதிதாக அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துள்ள விவசாயிகள், அவை அமைக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியிருந்தால் மானியத்தில் பக்கவாட்டு (லேட்டர்) குழாய்களை புதுப்பிக்கலாம்.

மானியம் (Subsidy)

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. புதிதாக ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு ரூ.25,000 அல்லது மின் மோட்டருக்கு ரூ.15,000, தரை நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு ரூ.40,000 மானியமாக வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், நில வரைபடம், சிறு மற்றும் குறு விவசாயி சான்றுடன் தாராபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

விவசாயிகளுக்கு உதவும் சோலார் உலர்த்தி: தேனி விவசாயிகள் ஆர்வம்!

நம்ம ஊரு பூண்டுக்கு இவ்வளவு மவுசா: சீனாவை பின்னுக்குத் தள்ளி ஏற்றுமதியில் முதலிடம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)