PM கிசானின் 10வது தவணை: தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2000க்கு பதிலாக 4000 ரூபாய் கிடைக்கும், தெரிந்துகொள்ளுங்கள் - நீங்கள் இரட்டிப்புத் தொகையைப் பெற தகுதியுடையவரா?
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், 11.37 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.1.58 லட்சம் கோடி பெற்றுள்ளனர். டிசம்பர் 15 முதல் 25க்குள் விவசாயிகளின் கணக்கில் 2000 ரூபாய் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில விவசாயிகளின் கணக்கில் 2000க்கு பதிலாக 4000ரூபாய் வரலாம் என கேள்வி எழும்பியுள்ளது.
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், 10வது தவணை பணம், வரும் வாரத்தில் விவசாயிகளின் கணக்கில் வர உள்ளது. சில ஊடக அறிக்கைகளின்படி, PM Kisan Yojanaவின் அடுத்த தவணை டிசம்பர் 15 முதல் 25க்குள் வரலாம் என எதிர்பார்ப்புகள் இருந்தன. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளின் கணக்கில் ரூ.6000 மூன்று தவணைகளாக பிரித்து, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000மாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகை விவசாயிகளின் கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் விண்ணப்பித்தல் அவசியம்.
இந்த திட்டம் விவசாயிகளுக்கு உதவும் வகையில் இந்திய அரசால் 2018 இல் தொடங்கப்பட்டதாகும். இதன் கீழ், மத்திய அரசு இதுவரை ஒன்பது தவணைகளை, முன்பே வழங்கியுள்ளது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், 11.37 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.1.58 லட்சம் கோடி பெற்றுள்ளனர். டிசம்பர் 15 முதல் 25 வரை விவசாயிகளின் கணக்கில் 2000 ரூபாய் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில விவசாயிகளின் கணக்கில் 2000த்திற்கு பதிலாக 4000ரூபாய் வரலாம் என வாய்ப்பு உள்ளது.
உங்கள் கணக்கில் பணம் வருமா இல்லையா என்பதை இப்படி தெரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் PM Kisan Yojana திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தால், PM Kisanஇன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று உங்கள் நிலையைப் பார்க்கலாம். உங்கள் கணக்கில் பணம் வருமா, வரவில்லையா என்ற தகவல் இங்கே கிடைக்கும். இதற்கு, இங்கே நீங்கள் விவசாயிகள் கார்னருக்குச் செல்ல வேண்டும், அதன் பிறகு பயனாளி நிலை விருப்பத்தை கிளிக் செய்யவும். அடுத்த பக்கத்தில், உங்கள் கணக்கில் பணம் வருமா இல்லையா என்ற தகவல் கிடைக்கும்.
இந்த தகவல் அறிய, லிங்கை கிளிக் செய்யுங்கள்:
https://pmkisan.gov.in/
மேலும் படிக்க:
PM Kisan: விவசாய இயந்திரங்கள் வாங்க 80% வரை மானியம்!
PM-Kisan: வங்கி மூழ்கினால் ரூ.5 லட்சம் கிடைக்கும் என உத்தரவாதம்