Farm Info

Saturday, 13 February 2021 03:39 PM , by: Daisy Rose Mary

விவசாயிகள் பட்டா, சிட்டாவுடன் குறிப்பிட்ட நிலத்தின் மீது விவசாயம் செய்வதற்காக நகைக் கடன் பெற்றிருந்தால் மட்டுமே, விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. வேளாண்மை சாராத நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்ட நகைக்கடன் இந்த தள்ளுபடி திட்டத்தின் கீழ் பொருந்தாது எனவும் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற சுமார் 16 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவை தொகையான ரூ. 12,110 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110விதியின் கீழ் சட்டப் பேரவையில் அறிவித்தார். அதைத்தொடர்ந்து, 2021 ஜனவரி 31ம் தேதி வரையிலான நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்வதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், கடன் தள்ளுபடி செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

குறுகியகால பயிர் கடன் தள்ளுபடி

ஜனவரி 31-ம் தேதி வரையிலான குறுகிய கால பயிர்க்கடன், நகையீட்டின் பேரில் வழங்கப்பட்ட குறுகிய கால பயிர்க்கடனுக்கான அசல், வட்டி, அபராத வட்டி மற்றும் இதர செலவினங்கள் அனைத்தும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும் ஆனால், போலி ஆவணங்கள், புனையப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் வழங்கப்பட்ட கடன் மற்றும் பினாமி கடன்கள் என நிரூபிக்கப்பட்டால் தள்ளுபடி பொருந்தாதும் என்றும் கூறப்பட்டுள்ளது.

விவசாய பயிர்கள் கடன் தள்ளுபடி அரசாணை வெளியிட்டார் தமிழக முதல்வர்!

வேளாண் சாராத நகை கடன்களுக்கு பொருந்தாது

அத்துடன், அரசு திட்டங்களின் கீழ் பயிர்க் கடன்களுக்காக மானியம் ஏதும் வாங்கியிருந்தால், பெறப்பட்ட மானியம் போக எஞ்சிய தொகை மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். முக்கியமாக, சிட்டா, பட்டா போன்ற ஆவணங்களுடன் குறிப்பிட்ட நிலத்தில் பயிர் செய்ய நகையீட்டின் பெயரில் பெறப்பட்ட நகைக்கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் எனவும், வேளாண்மை சாராத நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்ட நகைக்கடன் இந்த தள்ளுபடி திட்டத்தின் கீழ் பொருந்தாது எனவும் வழிகாட்டு நெறிமுறை கூறுகிறது.

கூட்டுறவு சங்கங்களுக்கு அறிவுரை

மேலும், ஒவ்வொரு விவசாயிக்கும் கடன் தள்ளுப்படி செய்யப்பட்ட முறையான சான்றிதழ் மற்றும் நிலுவை இன்மை சான்று வழங்க வேண்டும் என்றும், தள்ளுபடி செய்த தகுதியான கடன்களை வசூலிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்க கூடாது எனவும் கூட்டுறவு சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க..

Farm Loan wavier: ரூ.12,000 கோடி விவசாயப் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்தது தமிழக அரசு - விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி!

Crop loan waiver: பயிர்கடன் தள்ளுபடி எதிரொலி : கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகள் விவரங்கள் சேகரிப்பு!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)