சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 25 September, 2021 10:49 AM IST
Credit : Hindu Tamil

நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த சிறு தேயிலை விவசாயிகளுக்கு 1.21 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

தேயிலை விவசாயம் (Tea farming)

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் சீதோஷணநிலையைக் கருத்தில்கொண்டே அங்குத் தேயிலை விவசாயம் பிரதானமாகச் செய்யப்படுகிறது.  இந்த மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், தேயிலை விவசாயமே மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. 

குன்னுாரில், சிறு தேயிலை விவசாயம் மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்க, விவசாயிகளுக்கு சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ரூ.1.21 கோடி மானியம் (Rs 1.21 crore grant)

இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது ரூ.1.21 கோடி மானியம் வழங்கப்பட்டது.
இந்திய தேயிலை வாரியம் மற்றும் மாநில அரசின் சிறப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மானியம் வழங்கும் நிகழ்ச்சி, குன்னுார் உபாசி அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்த, வனத்துறை ராமச்சந்திரன் பேசுகையில்,சிறு தேயிலை விவசாயிகள் எண்ணிக்கையை அதிகரித்து ஊக்கப்படுத்தவும், சிறப்பு தேயிலை உற்பத்தியை சந்தைப்படுத்தவும் முன்னோடி திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

75 பேருக்கு மானியம் (Grant for 75 people)

இந்நிலையில், கவாத்து இயந்திரம், பேட்டரி மூலம் கொழுந்து அறுவடை இயந்திரத்திற்கு, 200 சிறுவிவசாயிகளுக்கும், சிறப்பு தேயிலை துாள், ஆர்கானிக் தேயிலை துாள் விற்பனை மையம், வேலையற்ற சிறு தேயிலை விவசாய இளைஞர்கள் புதிய தேயிலை அபிவிருத்தி தொழில் துவங்குவது, மினி தேயிலை தொழிற்சாலை அமைப்பது ஆகியவற்றிற்கு, 75 பேருக்கு, மாநில அரசின் சிறப்பு பகுதி மேம்பாட்டு நிதி உதவியில், 1.21 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. மானியத்தை முறையாகப் பெற்று தரமான தேயிலை துாள் தயாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தடை இல்லா சான்றுகள் (Evidence without restraint)

தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி, உறுப்பினர் குமரன், துணை இயக்குனர் ஹரிபிரகாஷ் ஆகியோர் பேசினர். கோத்தகிரி பகுதியை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், 275 பேருக்கு மானியம் மற்றும் பயனாளிகளுக்குத் தடை இல்லா சான்றுகள் வழங்கப்பட்டன.

மேலும் படிக்க...

உருவானது குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - வங்கக்கடலில் மீனவர்களுக்குத் தடை!

நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்டப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி!

English Summary: 1.21 crore subsidy for small tea farmers!
Published on: 25 September 2021, 10:33 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now