மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 September, 2021 11:51 AM IST

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ்வின் பிறந்த நாளை யொட்டி, தமிழகத்தில் 2 நாட்களில் 1.23 லட்சம் மரக்கன்றுகள், காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் வெற்றிகரமாக நடப்பட்டன.

ஈஷா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும், காவேரி கூக்குரல் இயக்கம் வேளாண்மை குறித்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக, ஜக்கி வாசுதேவ்-வின் பிறந்த நாளாளான செப்டம்பர் 3ம் தேதியை, நதிகளுக்குப் புத்துயிரூட்டும் தினமாகக அந்த இயக்கத்தினர் கொண்டாடினர்.

நதிகளுக்கு புத்துயிரூட்டும் தினம் (Revitalization Day for Rivers)

இதன் ஒருபகுதியாக, ஜக்கி வாசுதேவ்-வின் பிறந்த நாளாளான செப்டம்பர் 3ம் தேதியை, நதிகளுக்குப் புத்துயிரூட்டும் தினமாகக அந்த இயக்கத்தினர் கொண்டாடினர்.

இதையொட்டி, விவசாயிகள், மரக்கன்றுகளை புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், தர்மபுரி, சேலம், விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களில் நட்டனர்.

1.23 லட்சம் மரக்கன்றுகள் (1.23 lakh saplings)

இதுதொடர்பாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் தமிழ்நாடு மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் கூறியதாவது:-

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளுடன் இணைந்து கடந்த 2, 3-ந் தேதிகளில் 485 ஏக்கர் விவசாய நிலப்பரப்பில் 1.23 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. விவசாயிகளுக்கு பணப்பயன் தரக்கூடிய, மண்ணுக்கேற்ற டிம்பர் மரங்களான தேக்கு, வேங்கை, சந்தனம், செம்மரம், மலைவேம்பு, குமிழ் தேக்கு, கருமருது, மகாகனி போன்ற மரங்கள் நடவு செய்யப்பட்டன.

இதில் மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப்பணியாளர்கள் வழங்கினர். விவசாய நிலங்களில் மண்ணுக்கேற்ற மரங்களை காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப்பணியாளர்கள் பரிந்துரை செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

ஆறுகளை உயிர்ப்பித்தல் (Revitalizing rivers)

இந்த நிகழ்வில் பங்கேற்ற விவசாயிகள் கூறுகையில், “மரங்கள் மூலம் மண்ணின் வளம் மேம்பட்டு ஆறுகளை உயிர்ப்பிக்க முடியும். ஜக்கி வாசுதேவின் பிறந்த தினத்தை நதிகளுக்கு புத்துயிரூட்டும் தினமாக கொண்டாடுவதில் பெருமையடைகிறோம்” என்றனர்.

அதேநேரத்தில் ஜக்கி வாசுதேவின் பிறந்தநாளுக்கு மாநில முதல்-மந்திரிகள், மத்திய அமைச்சர்கள், திரைத்துறையினர் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மேலும் படிக்க...

வரத்து அதிகரிப்பால் கொய்யா விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை!

English Summary: 1.23 lakh saplings planted in 2 days - Cauvery cry movement organized!
Published on: 05 September 2021, 11:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now