பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 20 February, 2023 10:26 AM IST

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் 2,000 ரூபாய் நிதியுதவியின் 13-வது தவணை, இந்தத் தேதியில்  விடுவிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

ரூ.6,000

விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக 2019ஆம் ஆண்டில் பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டம் (PM Kisan Samman Nidhi Yojana) அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. காலாண்டுக்கு ஒருமுறை 2000 ரூபாய் விவசாயிகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.

மேலும் படிக்க: PM கிசான் 13வது தவணை நிலை அறிய வேண்டுமா?| விதைப்பண்ணை அமைக்க மானியம்| TNAU 2 நாள் பயிற்சி

12ஆவது தவணை

ஏற்கெனவே 11 தவணைகள் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் பணம் அனுப்பப்பட்டுவிட்டது. இந்நிலையில், 12-வது தவணைத் தொகையைக் கடந்த அக்டோபர் மாதம்   பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார்.சுமார் 11 கோடி தகுதியுள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் பணம் 16000 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. இதன்படி, 11 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக 2000 ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டது.

13-வது தவணை

இந்தத் திட்டத்தின் கீழ் 13-வது தவணைத் தொகை இந்த வாரம் அதாவது பிப்ரவரி 24ம் தேதி முதல்  27ம் தேதிக்குள் விடுவிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   இந்த 2000 ரூபாய் தொகை நேரடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு இந்தத் தொகை ஜனவரி மாதம் விடுவிக்கப்பட்டது.

யாருக்கு கிடைக்காது

இதுவரை தங்களது நில ஆவணம் சார்ந்த தகவல்களையும், இ-கேஒய்சி தகவல்களையும் பதிவு செய்யாத விவசாயிகள் இந்த 13-வது தவணையைப் பெற இயலாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடி

இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் மோசடிகளை தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் உள்ள லட்சக்கணக்கான தகுதியற்றவர்கள் அரசின் இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: PM Kisan : 13வது தவணை நிலை விவரங்களை இவ்வாறு சரிபார்க்கலாம்!

என்ன செய்யவேண்டும்?

  • முதலில் உங்களுடைய கணக்கில் பணம்வந்துவிட்டதா என்பதைப் பார்க்க வேண்டும்.
  • ஒருவேளை சில காரணங்களுக்காக பணம் வராமல் போகலாம். அதுகுறித்த நிலவரத்தை பிஎம் கிசான் இணையதளத்திலேயே நீங்கள் பார்க்கலாம்.
  • முதலில் பிஎம் கிசான் திட்டத்தின் அதிகாரபூர்வ வெப்சைட்டிற்குள் செல்லவும்.
  • அதன் பிறகு, பயனாளியின் நிலையை (BeneficiaryStatus.aspx) கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்களுடையப் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்ட பிறகு கேப்ட்சா குறியீட்டை நிரப்பி சமர்ப்பிக்கவும்

மேலும் படிக்க…

முக்திக்கான பாதையின் வழிகாட்டியாகத் திகழ்கிறார் சிவன்!

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000!- விபரம் உள்ளே

English Summary: 13th installment of PM-Kisan is coming on this date- Good News for Farmers!
Published on: 20 February 2023, 09:34 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now