Farm Info

Saturday, 07 November 2020 04:55 PM , by: Daisy Rose Mary

ஈரோடு மாவட்டத்தில் பயிர் மகசூலை அதிகரிக்கும் வகையில் நெல், நிலக்கடலை போன்ற பயிர்களில் 15 புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

புதிய ரகங்கள் அறிமுகம் 

இது குறித்து ஈரோடு மாவட்டம் வேளாண் இணை இயக்குநர் சி.சின்னசாமி கூறுகையில், வேளாண்மைத்துறை மூலம், நெற்பயிரில் 4 ரகங்களும், நிலக்கடலைப் பயிரில் 7 ரகங்களும், பயறு வகைகளில் 4 ரகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நெல் ரகங்கள் 

இதில் என்.எல்.ஆர் 34449 (நெல்லூர்) மற்றும் ‘சம்பா சப் 1’ ஆகிய நெல் ரகங்கள் அதிக நோய் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் பி.பி.டி 5204 - ரகத்திற்கு மாற்றாகவும், டிபிஎஸ் 5 ரகமானது ஏஎஸ்டி 16 நெல் ரகத்திற்கு (இட்லி குண்டு) மாற்றாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், அதிக மகசூல் தரும் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு திறன் ஆகிய பண்புகளைக் கொண்டுள்ள டி.கே.எம்.-13 (திருவூர்க்குப்பம்), திருச்சி -3 போன்ற ரகங்களும் நடப்பு பருவத்தில் ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

நிலக்கடலையில் புதிய ரகம் 

இது தவிர, நிலக்கடலைப்பயிரில் பிஎஸ்ஆர் 2, ஜிஜேஜி 31, ஜிஜேஜி 32, டிஎம்வி 14, ஐசிஜிவி 350, கோ 7 மற்றும் விஆர்ஐ 8 ஆகிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை தாங்கி அதிக மகசூல் தரும் ரகங்கள் ஆகும்.

உளுந்து ரகங்கள் 

அதேபோல் உளுந்து பயிரில் வம்பன் 8, வம்பன் 9 மற்றும் வம்பன் 10 ஆகிய ரகங்களும், பாசிப்பயறில் கோ 8 ரகமும் குறைவான வயது, பூச்சி, நோய்த்தாக்குதல் தாங்கும் தன்மை மற்றும் அதிக மகசூல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ரகங்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு, சிறப்பாக செயல்படும் ரகங்கள் அடுத்த பருவத்தில் மேலும் அதிகமாக விதை உற்பத்தி செய்யப்பட்டு கூடுதலான பரப்பளவில் சாகுபடி செய்யத் திட்டமிட்டப்பட்டுள்ளது என்றார்.

மேலும் படிக்க..

வேளாண் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற உழவன் செயலியை பயன்படுத்துங்கள் - விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!!

வெங்காய விலை எப்போது குறையும்? - வேளாண்மை பல்கலைக்கழகம் கணிப்பு!!

ரூ.50,000 செலவழித்தும் ரூ.5000க்கும் கூட வழியில்லை! - ஏரியில் தக்காளியை கொட்டிய விவசாயிகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)