தேசிய அளவிலான வேளாண் வணிக மேலாண்மைக் கல்வி நிறுவனங்களின் பட்டியலில், கோவையில் இயங்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 15-வது இடத்தைப் பிடித்துள்ளது.
தர வரிசைப் பட்டியல் (Ranking list)
தேசிய அளவிலான வேளாண் வணிக மேலாண்மைக் கல்வி நிறுவனங்களின் செயல்திறன் குறித்த தர வரிசைப் பட்டியல், வேளாண் வணிகம் மற்றும் ஊரகமதி சார்ந்த ஆலோசனையை வழங்கும் கான்சப்ட் வேளாண் நுட்ப ஆலோசனை மையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வுக்கானக் காரணிகள் (Factors for selection)
இத்தரவரிசைப் பட்டியல், வேளாண்மைக் கல்வி நிறுவனங்களின் வேளாண் தொழில் துறை சார்ந்த பாடத்திட்டம், கற்பித்தலில் புதுமை, சேர்க்கை முறை, கல்விக் கட்டணம், விளையாட்டு சார்ந்த கட்டமைப்பு, தொழில் நிறுவனங்களுடனான தொடர்புகள், வேலை வாய்ப்புகள், சர்வதேச மாணவர் பரிமாற்றம் மற்றும் ஏனைய உள் கட்டமைப்பு வசதிகள் முதலியவை அடிப்படையாகக் கொண்டது.
15- வது இடம் (15th place)
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேலாண்மைத்துறை, இந்திய வேளாண் வணிக மேலாண்மைக் கல்வி நிறுவனங்களின் செயல்திறன் குறித்த தர வரிசைப் பட்டியலில், இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (IIM'S) உள்ளிட்ட அனைத்திந்திய வேளாண் வணிகக் கல்வி நிறுவனங்களில் தேசிய அளவில் 15- வது இடம் பிடித்துள்ளது.
பட்டப்படிப்புகள் (Degrees)
வேளாண் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் கீழ் இயங்கி வரும் வேளாண் மற்றும் ஊரக மேலாண்மைத் துறை, வேளாண் வணிக மேலாண்மையில் இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது.
முதுநிலை பட்டப்படிப்பு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
உயர் பதவிகள் (High positions)
இத்துறையில் பயின்ற மாணவர்கள்,வேளாண் உற்பத்தி, பதனிடுதல், இடுபொருட்கள், வங்கிகள், சில்லறை வணிகம் மற்றும் ஏனைய வேளாண்மை சார்ந்த நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்றனர்.
உயர் கல்வி (Higher education)
சில மாணவர்கள் வேளாண் தொழில் முனைவோர்களாகவும் வெற்றி அடைந்துள்ளனர். இத்துறையில் பயின்ற இளநிலை மாணவர்கள், இந்தியாவின் முதன்மை வணிக மேலாண்மை கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயின்று வருகின்றனர்.
மேலும் படிக்க...
நெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு! விவசாயிகள் மகிழ்ச்சி!
கத்தரியில் ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாடு முறைகள்!
உரங்கள் இருப்பு நிலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவு!