16 மாவட்டங்களில் பழங்குடியின குடும்பங்களுக்கு வீட்டு வாசலுக்கு சென்று, PDS (ரேஷன்) கடைகளின் உணவு தானியங்கள் தரும் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடந்த மெய்நிகர் கூட்டத்திற்குப் பிறகு, உள்துறை அமைச்சரான நரோத்தம் மிஸ்ரா, விவசாயிகள் மற்றும் குடியிருப்புப் பயனர்களுக்கு ரூ. 20,500 கோடி செலவு செய்து அதனை மின் கட்டண மானியமாக வழங்க அமைச்சரவை தீர்மானித்திருப்பதாகக் கூறினார்.
மேலும் கிரஹ ஜோதி யோஜனா திட்டத்தின் கீழ், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள வீட்டு உபயோகப் பயனாளர்களுக்கான மானியம் தொடர்வதால், அரசின் கருவூலத்திற்கு ரூ. 4,981.69 கோடி செலவாகும் என்ற செய்தியை அதிகாரப்பூர்வ வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
விவசாய பம்புகள் (10 குதிரைத்திறன் கொண்ட பாம்புகள்) மற்றும் பிற விவசாயத் துறை சார்ந்த பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் மொத்த பில்களில் இருந்து ரூ.15,722.87 கோடி தள்ளுபடி கிடைக்கும். இதனால் சுமார் 21.75 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து கிடைத்ததகவலின்படி, ஒரு ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் எஸ்சி, எஸ்டி விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும் வழங்கப்படும் என்ற செய்தியும் குறிப்பிடத்தக்கது. 16 மாவட்டங்களில் உள்ள 74 தொகுதிகளில் இருக்கும் 7,511 கிராமங்களில் தோராயமாக பழங்குடியினருக்கு உதவும் முக்யமந்திரி ரேஷன் ஆப்கே துவார் யோஜனா, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனால் பழங்குடியின குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் பொது விநியோக அமைப்பு (PDS) கடைகளின் மூலம் தங்கள் வீடுகளுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களைப் பெறுவார்கள். இந்த மாதத்தின் இறுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாது என்றும் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: