Farm Info

Friday, 01 July 2022 10:30 PM , by: Elavarse Sivakumar

PM-Kisan திட்டதில் பயனாளியின் நிலையை சரிபார்ப்புக்கான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இனி மொபைல் நம்பர் இருந்தால்தான் பார்க்க முடியும்.

பிஎம் கிசான் திட்டம்

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிஎம் கிசான்) திட்டம், நாடு முழுவதும் உள்ள நலிவடைந்த விவசாயிகளின் பொருளதார நிதிச்சுமையை குறைப்பதற்காக உதவும் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு தவணைக்கு 2,000 ரூபாய் என மொத்தம் மூன்று தவணைகள் ஒவ்வொரு ஆண்டிலும் வழங்கப்படுகின்றன.

11ஆவது தவணை

பிஎம் கிசான் திட்டத்தின் 11ஆவது தவணைப் பணம் சென்ற சென்ற மாத இறுதியில் வழங்கப்பட்டது. 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இந்த நிதியுதவியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். அடுத்து 12ஆவது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

பணம் வரவில்லை

விவசாயிகள் சிலருக்கு 11ஆவது தவணைப் பணம் இன்னும் வரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. தகுதியுடைய விவசாயிகளுக்கு நிதியுதவி சரியாக வந்துவிடும். இதற்கு ஆதார் முக்கியம். சில நேரங்களில் ஆதார் எண், மொபைல் நம்பர், வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்கள் தவறாக வழங்கப்பட்டிருந்தாலும் நிதியுதவி வந்து சேராது. எனவே முதலில் இந்த விவரங்கள் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

பிஎம் கிசான் வெப்சைட்

எல்லாம் சரியாக இருந்து பணம் வராமல் இருந்தால் பிஎம் கிசான் வெப்சைட்டிலேயே அதை சரிபார்க்க முடியும். இதற்காக எங்கும் அலையத் தேவையில்லை. வீட்டில் அமர்ந்தபடியே ஆன்லைன் மூலமாகப் பார்க்கலாம்.

முக்கியமான அப்டேட்

இந்நிலையில், பயனாளிகளுக்கு பணம் வருவது தொடர்பான நிலையை பிஎம் கிசான் வெப்சைட்டில் சென்று ’farmers corner’ என்ற வசதியை கிளிக் செய்து அதில் ’beneficiary status’ என்ற ஆப்சனில் பார்க்கலாம். ஆனால் இதில் இதற்கு முன்னர் ஆதார் நம்பரைக் கொடுத்தாலே போதும். ஆனால் இனி மொபைல் நம்பர் கொடுத்தால்தான் பார்க்க முடியும்.

மேலும் படிக்க...

எரிவாயு சிலிண்டர் விலை ரூ.187 குறைந்தது!

7 டன் ரசாயன மாம்பழங்கள் - அதிரடி பறிமுதல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)